திருச்சூரில் வாக்குப்பதிவு முறைகேடு
கூடுதல் ஆதாரங்கள் வெளியாகின
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்த லில் நடிகர் சுரேஷ் கோபி பாஜக சார்பில் கேரள மாநிலம் திருச்சூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை யின் போது திருச்சூர் தொகுதியின் முடிவு கடும் சந்தேகத்தை எழுப்பியது. இத்த கைய சூழலில் கர்நாடகா, பீகார் போன்று திருச்சூரிலும் வாக்காளர் பட்டி யலில் முறைகேடு செய்யப்பட்டுள்ள தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற் போது ஒன்றிய இணையமைச்சராக உள்ள சுரேஷ் கோபி தேர்தலில் போட்டி யிடுவதற்காக அவர் தற்காலிகமாக திருச் சூரில் தங்கியிருந்த வீட்டு முகவரியில் அவரது குடும்பத்தினர் 11 பேரை வாக்கா ளர் பட்டியலில் சேர்த்துள்ளது ஆதாரத் துடன் வெளியானது. இது தீவிர முறை கேடு ஆகும். இந்நிலையில், திருச்சூரில் வாக்குப் பதிவு முறைகேடு தொடர்பாக கூடுதல் ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. பூங்குன்னம் கேபிடல் வில்லேஜ் அடுக்கு மாடி குடியிருப்பின் பிளாட் 4சி-இல் வாக்குப்பதிவு முறைகேடுகள் நடந்த தாக குடியிருப்பாளர் பிரசன்னா அசோ கன் உறுதிப்படுத்தினார். இங்குள்ள ஒரே வாக்காளர் பிரசன்னா மட்டுமே. இருப்பி னும், பூத் எண் 30 இன் வாக்காளர் பட்டிய லில் இந்த முகவரிக்கு 10 வாக்குகள் உள்ளன. மக்களவைத் தேர்தலுக்கு முன்பு 9 வாக்குகள் பொய்யாகச் சேர்க்கப் பட்டன. இதுதொடர்பாக பிரசன்னா அசோகன் கூறுகையில்,“எனது முகவரியில் வாக்கா ளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒன்பது பேரில் யாரையும் எனக்குத் தெரியாது. தேர்தலின் போது, பொது ஊழியர்கள் போலி வாக்குகள் தொடர்பான பிரச்சனை யை எனது கவனத்திற்குக் கொண்டு வந்த னர். அப்போதுதான் இந்த சம்பவம் குறித்து எனக்குத் தெரியவந்தது. அதை மாற்றுமாறு தேர்தல் ஆணையத்திடம் கையெழுத்திட்டு புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை” என அவர் கூறினார். சேர்க்கப்பட்ட 9 வாக்குகள்: 1304 : எம்.எஸ். மணீஷ், 1307 : முகமி அம்மா, 1308 : கே. சல்ஜா, 1313 : மோனி ஷா, 1314 : எஸ். சந்தோஷ் குமார், 1315: பி. சஜித் பாபு, 1316: எஸ்.அஜயகுமார், 1318: சுகேஷ், 1319: சுதீர், 1321: ஹரிதாசன் ஆகி யோர் ஆவர். இந்த விவகாரம் தொடர்பாக திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட இடது ஜன நாயக முன்னணி வேட்பாளர் வி.எஸ். சுனில் குமாரின் (சிபிஐ) தலைமை தேர் தல் முகவர் கே.பி.ராஜேந்திரன் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பி டத்தக்கது. திருச்சூரில் ஜனநாயகப் படுகொலை திருச்சூர் தொகுதியில் நடந்தது ஜன நாயகப் படுகொலை என்று கேரள கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,”வீட்டு உரிமையாளர்கள் கூட அறிய முடியாத வகையில் அவர்களின் முகவரிகளில் வாக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது என்பது கடுமையான குற்றம். இது ஜனநாயகத்தின் அப்பட்டமான படுகொலை. இந்த சம்பவங்கள் பாஜக ஜனநாயகத்தை எவ்வளவு அற்பமாக எடுத்துக் கொண்டது என்பதைக் காட்டு கிறது. இவ்வளவு பெரிய ஜனநாயக விரோத நடவடிக்கைகளைச் செய்த சுரேஷ் கோபி, ஒரு கணம் கூட மக்கள வை உறுப்பினராகத் தொடரத் தகுதி யற்றவர். அவருக்கு சூடு சொரணை இருந்தால், உடனடியாக எம்.பி., பத வியை ராஜினாமா செய்து வாக்காளர்க ளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஒன்றிய அமைச்சராக இருந்தும், சுரேஷ் கோபி இந்த விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனமாக இருந்து வருகிறார். இது அவருக்கு ஏற்பட்ட அவமானத்தை மறைக்கும் முயற்சி என அவர் கூறினார்.