சிலிண்டர் உயர்வை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் போராட்டம்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிலிண்டர் பற்றாக்குறை நிலவுவதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர் துவார் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்,”மேற்கு ஆசியாவில் நடக்கும் போரால் இந்தியாவுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்” என முழக்கங்களை எழுப்பினர்.
