states

முஸ்லிம் எம்.பி., இல்லாத பாஜக

புதுதில்லி, ஜுன் 1- மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, எம்.ஜே.அக்பர், சையது ஜாபர்  இஸ்லாம் ஆகியோருக்கு மாநிலங்களவை சீட் மறுக்கப் பட்டதால், ஆளும் பாஜக-வுக்கு,  முஸ்லிம் சமூ கத்தை சேர்ந்த ஒரு உறுப்பினர்கூட நாடாளு மன்றத்தில் இல்லாத சூழ்நிலைஏற்பட்டுள்ளது. பாஜகவில் உள்ள முஸ்லீம் எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூன்-ஜூலையில் முடி வடைகிறது. 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் 22 வேட்பாளர்களை நிறுத்திய பாஜக அவர் களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. நக்வியின்  பதவிக்காலம் ஜூலை 7 ஆம் தேதியுடன்  முடிவடைகிறது. அதன்பிறகு ஆறு மாதங்க ளுக்குள் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படா விட்டால், அமைச்சர் பதவி பறிபோகும். இதற்கிடையில், உத்தரப்பிரதேசத்தில் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ள ஆசம்கர்  மற்றும் ராம்பூர் மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் நக்வி போட்டி யிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது  மக்களவையில் ஒரு உறுப்பினர்கூட பாஜகவுக்கு இல்லை.