ஈரோட்டில் முப்பெரும் விழா: 1416 மார்க்சிஸ்ட் சந்தா ஒப்படைப்பு
ஈரோடு, செப்.28- தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு தின கருத்தரங்கம், நூல் வெளியீடு மற்றும் மார்க்சிஸ்ட் சந்தா ஒப்படைப்பு நிகழ்வு ஈரோட்டில் தோழர் டி.பி.முத்து சாமி நினைவகத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுந்தரராஜன் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் சிறப்புரையாற்றினார். ‘இந்துத்துவ மதவெறியை எதிர் கொள்ளுதல்’ என்ற தலைப்பில் முன் னாள் சட்டமன்ற உறுப்பினரும், கட்சி யின் மூத்த தலைவருமான எஸ்.நூர்முக மது கருத்துரையாற்றினார். இதை யடுத்து, ‘மாநாடுகள் வழியே மகத்தான வரலாறு’ என்ற புத்தகத்தை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ் வெளியிட திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி பெற்றுக் கொண்டார். இதன்பின் கோவை மாவட்டக்குழு சார்பில் 300, திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் 675, கரூர் மாவட்டக்குழு சார்பில் 125 மற்றும் ஈரோடு மாவட்டக்குழு சார்பில் 316 என மொத்தம் 1416 மார்க்சிஸ்ட் மாத இதழ் சந்தாக்களுக்கான தொகை ரூ.2 லட்ச த்து 26 ஆயிரத்து 260 வழங்கப்பட்டது. முடிவில், மாவட்டக்குழு உறுப்பினர் பி.எஸ்.பிரசன்னா நன்றி கூறினார்.
