states

img

அகிலேஷுக்கு எதிராக காங்கிரஸ் போட்டி இல்லை

உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் போட்டியிடும் கர்ஹல் தொகுதியிலும், அவ ரது சித்தப்பா சிவ்பால் யாதவ் போட்டியிடும் ஜஸ்வந்த் நகர் தொகுதி யிலும் வேட்பாளர்கள் நிறுத்துவதை காங்கிரஸ் தவிர்த்துள்ளது. 2019 மக்கள வைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி ஆகியோ ருக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியும் வேட் பாளர்களை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.