இந்திய ஊடக முதலாளிகளிடம் குவியும் செல்வம் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து
அகமதாபாத் இந்திய ஊடகங்களிடம் செல் வம் குவிந்து வருகிறது. ஊடக முதலாளிகள் ரியல் எஸ்டேட் அதிபர்களாக மாறியுள்ள னர். இது இந்திய ஜனநாயகத் திற்கு பெரும் ஆபத்தை உரு வாக்கும் என மூத்த கிராமப்புற பத்திரிகையாளரும், அறிஞருமான பி.சாய்நாத் எச்சரிக்கை விடுத் துள்ளார். ரியல் எஸ்டேட்டாக மாறிய ஊட கங்கள் அகமதாபாத்தில் நடை பெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அவர், “சுதந்திரத்திற்குப் பின் பிர தமர் நேரு தலைமையிலான அரசா னது மும்பை (பம்பாய்) நாரிமன் பாயிண்ட், டெல்லி பகதூர்ஷா ஜாஃபர் மார்க் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள நிலங்களை ஊடக நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் வழங்கியது. இந்த நிலங்களில் சில ஊடக நிறு வனங்கள் பல மாடி கட்டிடங்க ளைக் கட்டினாலும் அதில் ஒரு தளத்தை மட்டும் செய்தித்தாள் உள்ளிட்ட ஊடக பணிகளுக்கு வைத்துக்கொண்டு, மற்றவற்றை வாடகைக்கு விட்டுப் பெரும் செல் வத்தைக் குவித்தன. இதனால், ஊடக நிறுவனங்கள் செய்தித்தாள் தொழிலை விட ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக கவனம் செலுத் தின” எனக் குறிப்பிட்டார். இதற்கு உதாரணமாக, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குழு மத்தின் உரிமையாளரான வினீத் ஜெயின், “நாங்கள் செய்தித்தாள் தொழிலில் இல்லை; விளம்பரத் தொழிலில் இருக்கிறோம்” என்று ஒரு பேட்டியில் கூறியதையும் சாய்நாத் சுட்டிக்காட்டினார். பெருநிறுவனங்களின் ஆதிக்கம் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் வருகைக் குப் பிறகு, ஊடகத்தின் மீது பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் அதி கரித்துள்ளது. முகேஷ் அம்பானி, இந்திய ஊடகங்களில் சுமார் 40 சதவீதத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். கௌதம் அதானி என்டிடிவி-யை கைப் பற்றிவிட்டார். அரசியல்வாதிகள் பலரும் தொலைக்காட்சி அலை வரிசைகளைத் தொடங்கி ஊட கத்துறையில் கால்பதித்து வளர்ந்து விட்டனர். இந்த ஆதிக்கத்தின் காரண மாக, ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் பாகுபாடுகள் அதி கரித்து வருகிறது. குறிப்பாக பாலி வுட் மற்றும் வணிகச் செய்திகளை எழுத பலர் உள்ளனர். ஆனால் இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு என்ற அளவில் உள்ள கிரா மப்புற மற்றும் வறுமை தொடர் பான செய்திகளைச் சேகரிக்க போதிய நிருபர்கள் இல்லை என் றும் பி.சாய்நாத் வேதனை தெரி வித்தார். ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் ‘ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்’ என்ற அமைப்பு வெளி யிட்ட உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 180 நாடு களில் 161-வது இடத்தைப் பிடித்த பிறகும் புதிய சட்டங்களின் மூலமாக பத்திரிகை சுதந்திரத்தைத் அழிக்க முயல்கிறது பாஜக அரசு. தற்போது, லாப நோக் கற்ற ஊடக நிறுவனங்கள் மீது அதிகளவிலான வருமான வரி களை விதிக்க ஒரு சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதனால் அந்த ஊடகங்களின் மொத்த வரு வாயில் சுமார் 40 சதவீதம் வரி யாக கட்ட வேண்டிய சூழல் வரும் எனவும் சாய்நாத் எச்சரிக்கை விடுத்தார். “டிஜிட்டல் ஊடகத்தின் வரு கையால் செய்திகளை அதிகளவி லான மக்களுக்கு சமூக ஊட கத்தின் வாயிலாக கொண்டு செல் லும் வாய்ப்புகள் இருந்தாலும் அதி லும் பல்வேறு தடைகளும் புதுப் புது சவால்களும் உள்ளன. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக் கம் செலுத்தும் சமூக ஊடகத்திற்கு பணம் கட்டினால் தான் அந்த டிஜிட்டல் தொடர்பலைகள் அனை வருக்கும் நமது தகவல்களைக் கொண்டு செல்லும் வேலையை செய்யும்; இவ்வாறு விலைக்கு வாங்க முடியாத - கட்டுப்படுத்த முடியாத சுயேட்சையான பத்தி ரிக்கைகளை முடக்கும் வேலை களையும் அரசு செய்கிறது” என வும் பி.சாய்நாத் குறிப்பிட்டார்.