புதுதில்லி, நவ.16- கடந்த சில காலாண்டுகள் லாபம் இல்லாததால், ஆயி ரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து, செலவைக் குறைக்க அமேசான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன. இந்த வாரம் முதல் சுமார் 10,000 ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்யக்கூடும் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அமேசான் வரலாற்றில் இவ்வளவு பெரும் எண்ணிக்கை யில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது இது தான் முதன் முறை.. உலகளவில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான பணி யாளர்களைக் கொண்ட ஒரு நிறுவனத்தின் தொழிலாளர் தொகுப்பில் இது மிகக் குறைவு என்கிறது அமேசான். ஒரு மாத கால மதிப்பாய்விற்குப் பிறகு, சில லாபமற்ற துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை தனது நிறுவனத்திற்குள் உள்ள மற்ற துறைகளுக்கு வேலை தேடிக்கொள்ளுமாறு அமேசான், எச்சரித்துள்ளது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.