‘அயலவர்’ என்று கூறும் ஆபத்தான அரசியல்
சமீப காலமாக, நாடு முழு வதும் ஒன்றிய ஆட்சியாளர் கள் வங்க மொழி பேசுபவர்க ளுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் மதவெறி மற்றும் இனவெறித் தீயை விசிறிவிட்டுக்கொண்டிருக்கி றார்கள். நாட்டின் பல பகுதிகளில் வாழும் வங்கமொழி பேசும் புலம்பெயர்ந்தவர்க ளை வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று முத்திரை குத்துவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வங்க மொழி பேசுப வர் ஒருவர் முஸ்லிமாக இருந்துவிட்டால் அது ஒரு கொடிய அடையாளமாகக் கருதப்பட்டு, அவர் “வங்கதேசத்திலி ருந்து வந்த சட்டவிரோத ஊடுருவல் காரர்” என்று முத்திரை குத்தும் போக்கு ஏற்பட்டிருக்கிறது. இது நிச்சயமாக ஒரு பொய்க் கதையே யாகும். குடியுரிமை திருத்தச் சட்டம் வரைவு கொண்டுவரப்பட்டதற்கும் இதுவே அடிப்படையாக அமைந்தது. அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்தப் பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்தார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு அசாம் மக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பை அவர் அறி வார். வங்கமொழி பேசும் எவரும் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்களை அடையா ளம் காண உதவுவார்கள் என்றுகூறும் அளவுக்கு அவர் இப்போது சென்றி ருக்கிறார். அரசமைப்புச்சட்டத்தை அப்பட்டமானமுறையில் மீறி இவர் இவ்வாறு திருவாய்மலர்ந்திருக்கிறார். “அவர்கள் அனைவரும் வெளிநாட்டி னராக இல்லாமல் இருக்கலாம் என்று நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அசாம் மக்களாகிய நாங்கள், குறிப்பாக இந்துக்களாகிய நாங்கள், எங்கள் சொந்த நிலத்திலேயே நம்பிக்கை யற்றவிதத்தில் சிறுபான்மையினராக மாறி வருகிறோம். இவை அனைத்தும் 60 ஆண்டுகளில் நடந்துள்ளன. நமது கலாச்சாரம், நிலம், கோவில்களை நாங்கள் இழந்துவிட்டோம். சட்டம் எங்க ளுக்கு எந்தத் தீர்வையும் வழங்க வில்லை. அதனால்தான் நாங்கள் அவர்க ளைப் பழிவாங்கவேண்டும் என்ப தற்காக அல்ல, நாங்கள் உயிர்வாழ்வ தற்காக இவ்வாறு தீவிரமாக இருக்கி றோம்,” என்று இவரைக் கூற வைத்தி ருக்கிறது.
ஆக்ரோஷப் பிரச்சாரம்
எனினும், இந்த விரக்தியின் தொனி யில் வருத்தத்தின் எந்தத் தடயமும் இல்லை. வங்க மொழி பேசும் புலம் பெயர்ந்தோர் வங்க தேசத்தைச் சேர்ந்த வர்கள் என்ற அனுமானத்தின் அடிப்ப டையில் நடத்தப்படும் ஆக்ரோஷ மான பிரச்சாரம் வெற்றுத்தனமான தாகும். இந்த துரதிர்ஷ்டவசமான மக்களை எல்லையைத் தாண்டித் தள்ளும் அனைத்து முயற்சிகளிலும், அதி காரிகள் எந்த ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரத்தையும் தொடர்ந்து காட்டத் தவறிவிட்டனர் என்பதன் மூலம் இது நன்கு மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையான நோக்கம், அவர்க ளை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றுவது என்பதேயாகும். புல்டோசர்களைப் பயன்படுத்தி அவர்க ளின் இருப்பிடங்களை இடித்துத்தரை மட்டமாக்கிவிட்டு, கார்ப்பரேட் நில அப கரிப்பாளர்களிடம் லஞ்சத்தை வாங்கிக் கொண்டு அந்த இடங்களை ஒப்ப டைப்பது என்பது அதிகரித்துக்கொண் டிருப்பது தெளிவாகவே தெரிகிறது. இது தவிர, இந்தப் பிரச்சாரம், குறிப்பாக வரவிருக்கும் சட்டமன்றத் தேர் தல்களுக்கு முன்னதாக, மாநில அர சாங்கத்தின் பரந்த தோல்விகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்ப உதவுவதற்காக பன்முகத் தன்மை கொண்ட மக்களிடையே மத வெறி, இனவெறித் தீயை விசிறிவிடவும் பயன்படுத்தப்படுகிறது.
அதீத, மிகைப்படுத்துதல்
1971க்குப் பிறகும், வங்க தேசத்தி லிருந்து அசாமுக்கு புலம் பெயர்ந்து வந்துள்ளார்கள் என்பதை மறுக்க முடி யாது என்றபோதிலும், இவர்களின் அதீத வருகையால் அசாம் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்துவிட்டது என் பதை ஏற்பதற்கில்லை. இந்தக் கூற்று அகில இந்திய மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது முரணான தாகவே தெரிகிறது. இந்தப் பகுதியில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதி கரித்து வருவதாகக் கருதப்படும் நிலை யில், அவர்கள் அனைவரும் ‘சட்ட விரோத’ குடியேறிகள் என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கூற்றேயாகும். கிழக்கு வங்காளத்திலிருந்து தொ டர்ந்து இடம்பெயர்வு ஏற்பட்டதால், கால னித்துவ காலத்தில் அசாமில் குறிப்பி டத்தக்க மற்றும் மீளமுடியாத மக்கள் தொகை மாற்றம் ஏற்பட்டதாக மக்கள் தொகை ஆய்வுகள் நிறுவியுள்ளன. 1901 மற்றும் 1941க்கு இடையில் காலனித்துவ நிர்வாகத்தால் ஊக்குவிக்கப்பட்ட இந்த இடம்பெயர்வு, பிராந்தியத்தின் மக்கள் தொகையை மறுவடிவமைத்தது. தேர்தல் ஆணையத்தின் கூற்றுகளை நம்பினால், பிரிவினைக்கு முன்பு அசா மில் குடியேறிய லட்சக்கணக்கான கிழக்கு வங்காள முஸ்லிம் விவசாயிக ளின் சந்ததியினர் எங்கே என்கிற ஒரு தர்க்கரீதியான கேள்வி எழுகிறது.
உண்மைத் தரவுகள் குறித்து கவலைப்படாத போலிச் செய்திகள்
எனவே, சர்மாவின் கூற்றுகள், இன மற்றும் மத விவரக்குறிப்பு குறித்த ஆர்எஸ்எஸ்-இன் பிரச்சாரத்துடன் ஒத்துப்போகின்றன. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளோ வேறுபட்ட எதார்த்த நிலையைக் காட்டுகின்றன. 1991-2001க்கான பத்தாண்டுகளிலும், பின்னர் 2001-2011க்கான பத்தாண்டுகளிலும் இந்தி யாவிற்கு வந்த வெளிநாட்டுக் குடியேறி களின் ஒப்பீட்டைக் காணும்போது வங்கதேசத்திலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கை 2.79 லட்சத்திலிருந்து 1.72 லட்சமாகக் குறைந்துள்ளதையே காட்டு கிறது. இது கிட்டத்தட்ட 50 சதவீதக் குறை வாகும். எனினும் இவர்கள் வாட்சப் மூலம் கட்டவிழ்த்துவிடும் போலிச்செய்தி கள் மத்தியில் உண்மையான தரவுகள் குறித்து யார் கவலைப்படுகிறார்கள்? இந்த நிகழ்வு அசாமில் மட்டும் இல்லை. நாட்டின் பெரும்பகுதிகளில் உள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் மாநி லங்களில், வங்க மொழி பேசும் முஸ்லிம்களை சட்டவிரோத வங்க தேச குடியேறிகளுடன் ஒப்பிடும் பிரச்சா ரம் பரவலாக உள்ளது. ஆவணங்களின் கடுமையான சரிபார்ப்பு இல்லாமல் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். பல இடங்களில் வன்முறைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். மேற்கு வங்கத்தில், முஸ்லிம்கள் தோராயமாக 2.47 கோடி பேர் இருக்கிறார்கள். இது, அம்மாநி லத்தின் மொத்த மக்கள் தொகையான 9.13 கோடியில் 27.01 சதவீதம் ஆகும். மோசமான பொருளாதார நிலைமை யைக் கருத்தில் கொண்டு, அவர்களில் பலர் வேலை தேடி மாநில எல்லைக ளுக்கு அப்பால் இடம்பெயர்வது இயல்பா னதாகும். இது மாநிலங்களுக்கு இடை யேயான இடம்பெயர்வில் குறிப்பி டத்தக்க பங்கை உருவாக்குகிறது.
ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டைகள் புறக்கணிக்கப்பட்டால்...
குடியுரிமையை உறுதிப்படுத்து வதற்கு, ஆதார் அல்லது ரேஷன் கார்டுகள் அல்லது வாக்காளர் அடை யாள அட்டை போன்ற அனைத்து ஆதா ரங்களும் புறக்கணிக்கப்பட்டால் இந்தத் தொழிலாளர்களின் பாதிப்புக்கு வேறு விளக்கம் தேவையில்லை. கோவிட்-19 பெருந்தொற்று காலத்திய ஊரடங்கின் போது அவர்களின் பரிதாபமான நிலை வெளிப்பட்டது. நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் படங்கள், ஒரு தாய் தனது குழந்தை யுடன் தனது சக்கர சூட்கேஸை மேலே இழுத்துச் செல்வது, அல்லது ஓடும் ரயிலில் உயிரிழந்த புலம்பெயர்ந் தோரின் படங்கள் நம் நினைவை இன் றைக்கும் அலைக்கழித்துக்கொண்டி ருக்கின்றன.
முதலாளித்துவமும் புலம் பெயர் தொழிலாளரும்
உலக முதலாளித்துவத்தின் ஒருங்கி ணைந்த அம்சமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எப்போதும் இருந்து வருவதைக் காண வரலாற்றை ஆழ மாக ஆராய வேண்டிய அவசியமில்லை. முதலாளித்துவம் காலனிகள், அரை காலனிகள் மற்றும் பொருளாதார ரீதி யாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலி ருந்து பெறப்பட்ட தொழிலாளர்களையே நம்பியுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் (தேயிலை, காபி, சர்க்கரை, ரப்பர்) தோட்டங்கள், பெரிய அளவிலான ரயில்வே மற்றும் தந்தி இணைப்புகள் கட்டுமானம் மற்றும் நவீன சுரங்கத்தின் தொடக்கம் ஆகியவை எழுந்தன. இது முன்னெப்போதும் இல்லாத தொழிலாளர் இயக்கத்தின் சகாப்தமாகவும் இருந்தது. இதன் விளைவாக, மாநிலங்கள் இடம் பெயர்வை ஒழுங்குபடுத்தவும் நிர்வகி க்கவும் அமைப்புகளை உருவாக்கின. அதன் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை அங்கீகரித்தன.
அடையாள அடிப்படையில் வெறியுணர்வு விசிறல்
21ஆம் நூற்றாண்டில், நிதி மூல தனத்தை அடிப்படையாகக் கொண்ட உலகமயம், மோதல்களால் தூண்டப் பட்ட இடப்பெயர்ச்சி மற்றும் நாடு கடந்த தொழிலாளர் ஓட்டங்கள் ஆகிய வற்றால், இடம்பெயர்வு புதிய அவ சரத்தை எடுத்துள்ளது. இருப்பினும், இந்தப் போக்குடன், தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் எழுச்சியும், மக்கள் மத்தியில் அடையாள அடிப்படையிலான வெறியுணர்வையும் விசிறிவிடுவதற்கு வசதியாகிவிட்டது. 2024ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியாகியுள்ள சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் அறிக்கையானது, “உலகப் பொருளாதாரத்தில் சர்வதேச புலம் பெயர்ந்தோர் முக்கியப் பங்கு வகி க்கின்றனர்” என்றும், “இவர்கள் உலக அளவிலான தொழிலாளர் வர்க்கத்தில் 4.7 சதவீதமாக உள்ளனர்” என்றும், “பெரும்பாலானவர்கள் அதிக வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளிலும், சேவைகள் குறிப்பாக பராமரிப்பு வழங்கல் போன்ற துறைகளில் பணிபுரிகின்றனர்” என்றும் கூறியிருக்கிறது. இருப்பினும் இந்தப் பொ ருளாதார எதார்த்த நிலைகளையெல் லாம் புறக்கணிக்கும் விதத்தில் மக்கள் மத்தியில் பய உணர்வையும், வெறுப்பை யும் தூண்டும் விதத்தில் அரசியல் உந்து தல் அதிகரித்து வருவதையும் நாம் காண்கிறோம். டொனால்டு டிரம்ப்பின் கொள்கைகள் “விலக்கு மற்றும் அயல வர்” நோக்கிய இந்த உந்துதலை எடுத்துக்காட்டுகின்றன. இடம்பெயர்வு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்க ளை இவ்வாறு குற்றமாக்குவது திட்ட வட்டமாக நிராகரிக்கப்பட வேண்டும்.
ஆர்எஸ்எஸ் - கார்ப்பரேட் கூட்டணி
இத்தகைய உலகளாவிய நிகழ்ச்சிப் போக்குகளிலிருந்து இந்தியாவில் நடை பெறும் நிகழ்ச்சிப்போக்குகளைத் தனித்துப் பார்க்க முடியாது. ஆர் எஸ்எஸ்-இந்துத்துவா சித்தாந்தம் ஒரு சக்திவாய்ந்த கார்ப்பரேட்-இந்துத்துவா மதவெறிக் கள்ளக்கூட்டணி ஒன்றி யத்தில் ஆட்சியில் இருந்துவருவதால், இவர்களால் வங்க மொழி பேசும் உழைக்கும் மக்கள் மீதான தாக்கு தல்கள் நிச்சயமாக நடந்திடும். இப்போது நடைபெற்று வரும் ஆட்சியானது, பல்வேறு இனங்களுக்கு எதிரானது, பல்வேறு மொழியினருக்கு எதிரானது மற்றும் பல்வேறு கலாச்சாரப் பன்மு கத்தன்மைக்கு எதிரானதாகும். இவர்க ளின் இந்துத்துவா சித்தாந்தம், நம் அனைத்துத்தரப்பினராலும் வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு சுதந்திரப் போராட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்தியா என்கிற கருத்தாக்கத்தின் அடித்தளத்தையே தாக்குகிறது. இவ்வாறு கடுமையான போராட் டங்கள் மூலமாக நாம் பெற்ற உரிமைக ளையும், மனித நேயத்தையும் அழித்திட, நாம் ஒருபோதும் அனுமதித்திடக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று இவர்களின் இத்தகைய இழி முயற்சிகளை முறியடித்திடுவோம். ஜூலை 23, 2025, தமிழில்: ச.வீரமணி