states

img

தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்

தெரு நாய்களை  பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்

தில்லி அரசுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது.  

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள்,”தில்லி, தில்லி மாநகராட்சி, என்எம்டிசி ஆகிய அனைத்துப் பகுதிகளில் இருந்தும், தெரு நாய்களை விரைவில் பிடிக்கத் தொடங்க வேண்டும். அதை எப்படிச் செய்வது என்பது பற்றி அதிகாரிகள் பரி சீலிக்க வேண்டும். அவர்கள் இதற்காக ஒரு படையை உருவாக்க வேண்டு மானால், அதை விரைவில் செய்யுங்கள்.  இருப்பினும் அனைத்துப் பகுதிகளை யும் தெரு நாய்கள் இல்லாததாக மாற்று வதற்கான முதல் மற்றும் முக்கிய நடவ டிக்கையாக இது இருக்க வேண்டும். இதில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது. உடனடியாக அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தெரு நாய்களை கொண்டுவந்து காப்பகங்களில் அடைக்கவேண்டும்.  

தற்போதைக்கு, மற்ற விதிகளை மறந்துவிடுங்கள். தில்லியின் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக நாய் காப்பகங்களை கட்ட வேண்டும். இந்த காப்பகங்களில், நாய்களை கையாளக்  கூடிய, கருத்தடை மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கக் கூடிய நிபுணர் கள் இருக்க வேண்டும். எந்தக் காரணத் தைக் கொண்டும் இந்த நாய்களை வெளி யே விடக்கூடாது. நாய்கள் இந்த காப்ப கங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த சிசிடிவி கேமராக் கள் அமைக்கப்பட வேண்டும். நாய்க்கடி சம்பவங்கள் குறித்து புகாரளிக்க ஒரு ஹெல்ப்லைனைத் தொடங்கவேண்டும். இதில் முக்கியமானது என்னவென்றால், ஒரு தெருநாய் கூட மீண்டும் விடுவிக்கப் படக் கூடாது. இது நடந்துள்ளது என்று எங்களுக்குத் தெரிந்தால், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என எச்சரிக்கை விடுத்தனர்.