states

img

தோட்டத்தொழில்-தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை ஒன்றிய- மாநில அரசுகள் பாதுகாத்திட வேண்டும்!

தோட்டத் தொழிலாளர்கள் சம்மேளன அகில இந்திய மாநாடு வலியுறுத்தல்

டார்ஜிலிங்,டிச.7- உச்சநீதிமன்றம் அறிவித்த மேற்குத் தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல விரி வாக்கத்தை தடுத்து நிறுத்தி தோட்டத் தொழில் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வா தாரத்தை பாதுகாத்திட ஒன்றிய, மாநில அரசு கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அகில இந்திய தோட்டத் தொழிலாளர்கள் சம்  மேளனத்தின் 10 ஆவது மாநாடு வலியுறுத்தி யுள்ளது. அகில இந்திய தோட்டத் தொழிலாளர்கள்  சம்மேளன (சிஐடியு) 10 ஆவது மாநாடு மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 1-2 ஆகிய தேதிகளில் சம்மேள னத் துணைத் தலைவர் சி.கே. உன்னி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரள, கர்நாடகா. மேற்குவங்கம், அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். டிசம்பர் 1 அன்று மேற்குவங்க தோட்டத்  தொழிலாளர்கள் சங்கம் துவங்கி ஐம்ப தாண்டு நிறைவு விழாவினையொட்டி நடை பெற்ற பேரணியில் டார்ஜிலிங் உள்ளிட்ட பல  மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். சிஐ டியு அகில இந்திய தலைவர் கே.ஹேமலதா  மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார். சம்மேளன பொதுச் செயலாளர்  ஜியா வுல் ஆலம்  ஸ்தாபன அறிக்கை  சமர்ப்  பித்தார். 

மாநாட்டில், தோட்டங்களில் பணிபுரியும்  தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத  ஊதியம் ரூ.26 ஆயிரத்தை உறுதிப்படுத்திட வேண்டும்; இந்திய தோட்டத் தொழிலா ளர்கள் சட்டப்படி, சமூக, சட்டப் பலன்கள் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்  டும்; ஓய்வு பெற்ற தோட்டத் தொழிலாளர் களுக்கு ஓய்வூதியம், நிலம் மற்றும் வீடு ஒதுக்கிட வேண்டும், உச்சநீதிமன்றம் அறி வித்த மேற்குத்தொடர்ச்சி மலை சிறப்பு மண்  டல விரிவாக்கத்தை தடுத்து நிறுத்தி, அப்  பகுதிகளில் வாழும் மக்களையும், தோட்டத்  தொழில் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதா ரத்தை பாதுகாத்திட ஒன்றிய,  மாநில அரசு கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்; தொழி லாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட பிரா விடண்ட் பணம், நிலுவையிலுள்ள பணிக்  கொடையை உடனடியாக வழங்க வேண்டும்;  தோட்டங்களில் பெண்களின் பிரச்சனை களுக்கு தீர்வுகாண உச்சநீதிமன்ற விசாகா வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் பெண் தொழிலாளர்கள் குறைதீர்க்கும் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய நாட்டின் தொழிலாளர் சட்டங் களை திருத்தியதைக் கண்டித்தும், விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ்  வாதாரத்தை பாதிக்கின்ற ஒன்றிய  அரசின் நட வடிக்கைகளை கண்டித்து சிஐடியு, விவசாயி கள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து 2023 ஏப்ரல் 25 அன்று நடத்திட உள்ள பேரணியில் இந்தியா முழுவதும் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் பங்கேற் பது என முடிவு செய்யப்பட்டது. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சி.கே. உன்னி கிருஷ்ணன், பொதுச்செயலாளராக ஜியா வுல் ஆலம், பொருளாளராக அஸிக் தத்தா ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ கத்திலிருந்து கே.சி. கோபி குமார் தேசிய  செயலாளராகவும், செயற்குழு உறுப்பினர் களும் தேர்வு செய்யப்பட்டனர்.