பெங்களூரு, மார்ச் 25 - அரசுப் பதவிகளை ஆர்எஸ் எஸ்-காரர்கள் பிடித்திருப்பது, இந்த நாட்டின் துரதிர்ஷ்டம் என்று கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக- வுக்கு, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பதிலடி கொடுத்துள்ளனர். பாஜக ஆட்சி நடக்கும் கர்நாடக சட்டப்பேரவையில், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனை குறி த்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரு மான சித்தராமையா பேசுகையில், சில பாஜக தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுடனான தனது நட்பு குறித்து கூறினார். அப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பு பற்றியும் குறிப்பிட்டார். “அரசியலில் எந்த சித்தாந்தத் தைப் பின்பற்றினாலும் கூட ஒரு வருக்கு ஒருவர் பரஸ்பரம் மரியா தை கொடுக்க வேண்டும். ஒவ்வொ ருவருக்கும் இடையேயான தனிப் பட்ட உறவுக்குப் பின்னால்தான் பாஜக, ஆர்எஸ்எஸ், காங்கிரஸ் என்ற கட்சி சார்பு வரும்” என்றார்.
அப்போது, கர்நாடக சட்டப்பேர வை சபாநாயகர் விஸ்வேஸ்வர் காகேரி ஹெக்டே குறுக்கிட்டு, “ஏன், திடீரென்று தேவையில்லாமல் ‘எங்கள் ஆர்எஸ்எஸ்’ பற்றி பேசு கிறீர்கள்?’’ என கேட்கவே, அதற்கு சித்தராமையா விளக்கமளிக்க துவங் கினார். முன்னதாக, காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது கான் குறுக் கீட்டு, “விஸ்வேஸ்வர் காகேரி ஹெக்டே, சபாநாயகர் இருக்கை யில் அமர்ந்து கொண்டு ‘எங்கள் ஆர்எஸ்எஸ்’ எனக்கூறுவது சரி யில்லை’’ என்று ஆட்சேபம் தெரி வித்தார். அதற்கு சபாநாயகர் ஹெக்டே, “நிச்சயமாக, ஆர்எஸ்எஸ் எங்களுக் கானது. நான் ஆர்எஸ்எஸ்-சில் இருந்து வந்தவன். இதனால் ‘எங் கள் ஆர்எஸ்எஸ்’ என கூறுவதில் தவறு என்ன இருக்கிறது?. விரை வில் நீங்கள் (முஸ்லிம்கள்) அதை உங்களுக்கான ஆர்எஸ்எஸ் என அழைக்க வேண்டியது இருக்கும்’’ என்றார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் ஜமீர் அகமது கான், யு.டி. காதர், பிரியங்க் கார்கே உள்ளிட்டோர் மீண்டும் எதிர்ப்பு தெரிவிக்கவே, வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோக் குறுக்கிட்டு, “ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சரி, அனைத்து முக்கிய அரசியல் பதவிகளிலும் ஆர்எஸ்எஸ்-சில் இருந்து வரும் தலைவர்கள்தான் தற்போது அங்கம் வகிக்கின்றனர்’’ என்றார். அதற்கு, “இது இந்திய நாட்டுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டம்” என காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பதிலடி கொடுத்தனர்.