குடியரசு துணைத் தலைவர் தேர்தல் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளை பாஜக ரகசியமாக அணுகி வருகிறது சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு
மும்பை குடியரசு துணைத் தேர்த லில் பெரும்பான்மை இருந்தும், “இந்தியா” கூட்டணிக் கட்சிகளை பாஜக ரகசி யமாக அணுகி வருகிறது என இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”குடியரசு துணைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநா யக கூட்டணிக்கு நல்ல பெரும் பான்மை உள்ளது. ஆனாலும் பாஜக வியர்வை சொட்டச் சொட்ட போராடுகிறது. இதற்கு காரணம் “இந்தியா” கூட்டணி அறிவித்துள்ள வேட்பாளர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். அதனால் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் - ஜனசேனா கட்சியின் வாக்குகள் மற்றும் தெலுங்கானாவில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள் மீது பாஜகவிற்கு முற்றிலும் நம்பிக்கை இல்லை. 2007ஆம் ஆண்டு ஒருங்கிணை ந்த சிவசேனா கட்சி பாஜக கூட்ட ணியில் இருந்தது. அப்போது குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளராக பிரதீபா பாட்டில் அறிவிக்கப்பட்டார். அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதற்காக காங்கி ரஸ் அறிவித்த வேட்பாளரை ஆத ரிக்க முடிவு செய்தது சிவசேனா. இப்போது ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.,க்கள், எதிர்க் கட்சி வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கும் வாய்ப் புள்ளது. அதனால் தான் பெரும் பான்மை இருந்தும் ஆதரவுக் காக “இந்தியா” கூட்டணிக் கட்சி களை பாஜக ரகசியமாக அணுகி வருகிறது” என அவர் குற்றம் சாட்டினார்.