தில்லி பல்கலைக்கழகத் தேர்தல்கள் 2 வளாகங்களில் எஸ்எப்ஐ அபார வெற்றி
புதுதில்லி தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல்களில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) சாதனை படைத்தது. தில்லி சமூகப் பணிப் பள்ளியில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும், தில்லி ஜாகீர் உசேன் கல்லூரியில் மூன்று முக்கிய பதவிகளில் இரண்டையும் எஸ்எப்ஐ வென்றது. தில்லி சமூகப் பணிப் பள்ளியின் தலைவ ராக ஹிமான்ஷு பாண்டேவும், பொதுச் செயலா ளராக மாபனி லாம்ஹீவும் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். கேரளத்தைச் சேர்ந்த எஸ்.கௌரி சங்கரி உட்பட 4 நிர்வாக கவுன்சிலர்களும் வெற்றி பெற்ற னர். ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவான கல்லூரி அதிகாரிகள் தங்கள் வேட்புமனுக்க ளை நிராகரித்ததால், வளாகத்தில் மத்திய கவுன்சிலர் பதவியை எஸ்எப்ஐ இழந்தது. பல் கலைக்கழகத்தில் பல இடங்களில் எஸ்எப்ஐ வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராக ரிக்கப்பட்டன. ஏபிவிபி-யின் ஏகபோக உரிமையில் இருந்த ஜாகீர் உசேன் கல்லூரியில் பொதுச் செயலா ளராக நசீம் கான் மற்றும் மத்திய கவுன்சிலராக முகமது சயீத் வெற்றி பெற்றனர். இணைச் செயலாளர் பதவியை வெறும் 8 வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்எப்ஐ தவறவிட்டது. பல்கலைக்கழக சங்கத் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் பதவி களை ஏபிவிபி வென்றது. துணைத் தலைவர் பதவியை என்எஸ்யுஐ (காங்கிரஸ்) வென்றது. இடதுசாரி மாணவர் கூட்டணியின் ஒரு பகுதியாக தில்லி பல்கலைக்கழக பொதுச் செய லாளர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்எப்ஐ செயற் பாட்டாளர் அபிநந்தனா 9,535 வாக்குகளைப் பெற்றார். தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை ஒரு தீர்க்கமான சக்தியாக மாற்றிய மாணவர்களை வாழ்த்துவதாக எஸ்எப்ஐ தில்லி பிரிவுத் தலைவர் சூரஜ் இளமான் மற்றும் செயலாளர் ஐஷே கோஷ் கூறினர். ஆயிரத்தில் இருந்து பத்தாயிரம் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளில் இருந்து இன்று பத்தாயிரம் வாக்குகளை இந்திய மாணவர் சங்கம் பெற்றிருப்பது, மிக விரைவில் தில்லி பல்கலைக்கழக சங்கத் தேர்தல்களில் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சோசலிசத்தின் கொடியை ஏற்றும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தில்லி பல்க லைக்கழகத்தின் கீழ் பல்வேறு வளாக மாணவர் சங்கத் தேர்தல்களில் வெற்றி பெற முடிந்ததும், பல வளாகங்களில் சிறப்பாகச் செயல்பட முடிந்த தும் பெருமைக்குரிய விஷயம். தோழர்களே, முன்னேறுவோம்! என இந்திய மாணவர் சங் கத்தின் அகில இந்திய தலைவர் ஆதர்ஷ் எம் சஜி தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.