ஆர்எஸ்எஸ் முகாமில் பாலியல் துன்புறுத்தல் கேரளாவில் 24 வயது இளைஞர் தற்கொலை
கோட்டயம் ஆர்எஸ்எஸ் முகாமில் பாலி யல் துன்புறுத்தலுக்கு ஆளான இளைஞர் தற் கொலை செய்து கொண்ட சம்ப வத்தில் கேரள காவல்துறை வழக் குப்பதிவு செய்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வஞ்சிமலை அடுத்த சாமக்காலாவைச் சேர்ந்த ஆனந்து அஜி. 24 வயது. ஐடி ஊழியர் ஆவார். இவர் 2 நாட்களுக்கு முன் ஆர்எஸ்எஸ் முகாமில் கொடூர மான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தனது இன்ஸ்டாகி ராமில் பதிவிட்ட பிறகு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் எலிகுளம் கிளை மற்றும் வாலி பர் சங்க வழூர் ஒன்றியக் குழு பொன்குன்னம் காவல்நிலையத் தில் அளித்த புகாரில், “சிறுவயதிலி ருந்தே ஆனந்தை எலிகுளம், தம்ப லக்காடு மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பாலி யல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அனை வரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என குறிப்பிடப்பட் டுள்ளது. தற்கொலைக்கு முன் இன்ஸ்டா கிராமில் ஆனந்து அஜி வெளியிட்ட மரணக் குறிப்பில்,”நான் தற் கொலை செய்து கொள்வது பெண்ணாலோ, காதல் விவகா ரத்தாலோ, கடன் பிரச்சனையாலோ அல்ல. எனது பதற்றம் மற்றும் மனச்சோர்வு காரணமாக நான் இதைச் செய்கிறேன். எனக்கு ஒரு நபர் மற்றும் ஒரு அமைப்பைத் தவிர வேறு யாரிடமும் கோபம் இல்லை. அந்த அமைப்பு ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம்), என் தந்தை என்னை அதில் சேரச் செய்தார். ஆர்எஸ்எஸ்ஸின் பல உறுப்பினர்களால் நான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானேன். ஆர்எஸ்எஸ் முகாம்களில் பாலி யல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிர யோகம் பரவலாக உள்ளது. இத ற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் பலர் இதை நம்பாமல் போகலாம்” என அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் கடுமை யான நடவடிக்கை எடுக்கக் கோரி வாலிபர் சங்கம், கேரள மாநில இளைஞர் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளது. வி.கே.சனோஜ் கண்டனம் வாலிபர் சங்க கேரள மாநிலச் செயலாளர் வி.கே.சனோஜ் பேசு கையில்,”ஆனந்து வெளியிட்ட அறிக்கை ஆர்எஸ்எஸ்ஸின் மனி தாபிமானமற்ற முகத்தை அம்ப லப்படுத்துகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நமது சமூகத்தில் ஆர்எஸ்எஸ் எவ்வளவு ஆபத்தானது என்பது தெளிவாகி றது. இதுபோன்ற கிளைகளிலி ருந்து குழந்தைகளை ஒதுக்கி வைக்க வேண்டும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். ஆர்எஸ்எஸ் பயிற்சி மையத் தில் பல குழந்தைகள் இதுபோன்ற கொடூரமான துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களை மீட்டு ஆலோசனை வழங்க வேண் டும். இந்த சம்பவம் குறித்து விரி வான விசாரணை நடத்தப்படும் என்று காஞ்சிரப்பள்ளி வாலிபர் சங்க தலைவர் சஜு வர்கீஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை. மவுனம் காத்து வருகிறது.
