மூத்த எழுத்தாளர் சந்தியா ரமேஷ்
கொரோனா தொடங்கி 5 ஆண்டுகள் ஆகியும், கேரளம் ஏன் முதலில் பாதிக்கப்பட்டது? என இன்னமும் கேட்கிறார்கள். கேரள அரசிடம் தேவையான உள்கட்டமைப்பு உள்ளது. இதுதான் காரணம். அதனால் தான் கொரோனா தொற்றை முதன்முதலாக அறிவித்தது. எனது கேள்வி என்னவென்றால், பிற மாநிலங்கள் ஏன் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை, நோய்க்கிருமிகள் மாநில எல்லைகளால் கட்டுப்படுத்தப்படுவதில்லை என்பது தான்.
சிவசேனா(உத்தவ்) எம்எல்ஏ ஆதித்யா தாக்கரே
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2024ஆம் ஆண்டு அடல் சேது சாலை திறக்கப்பட்டது. இந்த சாலை ஒரு வருடத்திற்கு கூட தாங்கவில்லை. மிக மோசமான அளவில் சேதமடைந்து விட்டது. பாஜக கொள்ளையடிக்கவே ஆட்சி அதிகாரத்தில் அமருகிறது.
ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்
ஒரு எச்1பி விசாவுக்கான கட்டணத்தை 88 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளார் டிரம்ப். அமெரிக்க தேர்தலில் அவர் வெற்றி பெற்றதும், அவருக்கு யாகம் செய்து கொண்டாடிய இந்து சேனா அமைப்பு எங்கே போனது? இஸ்லாமியர்களை டிரம்ப் வெறுத்தார் என நினைத்து இந்து சேனா அவரை கொண்டாடியது. உண்மையில் டிரம்ப் தன்னை மட்டும்தான் நேசிக்கிறார். புலம்பெயர்ந்து அமெரிக்காவுக்கு வந்த அனைவரையும் வெறுக்கிறார்.
திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ்
காசாவில் நடக்கும் போருக்கு இஸ்ரேல் மட்டும் காரணம் அல்ல. அமெரிக்காவும் காரணம்.. மோடியும் தான் காரணம்.