states

img

ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் சுட்டுக்கொலை : பீகாரில் பதற்றமான சூழல்

ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் சுட்டுக்கொலை : பீகாரில் பதற்றமான சூழல்

பாட்னா பீகார் மாநிலத்தில் பாஜக - ஐக்கிய ஜன தாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக  ஐக்கிய ஜனதாதள மூத்த தலைவர் நிதிஷ் குமார் உள்ளார். பீகாரில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தோல்வி பயத்தால் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளை பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவான குண்டர் கள் கொடூரத் தாக்குதல் மூலம் படுகொலை செய்து வருகின்றனர். இந்நிலையில், பீகாரின் வைஷாலி மாவட்ட ஆர்ஜேடி கட்சியின் மண்டல தலைவரான ராஜ்குமார் என்ற ஆலா ராய் புதன்கிழமை அன்று மர்மநபர்களால் படுகொலை செய்யப் பட்டார். ராஜேந்திர நகர் முனையத்திற்கு அரு கிலுள்ள தெரு எண் 17இல் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. 3க்கும் மேற்பட்ட குண்டர்கள் நடத்திய இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்த ராஜ்குமார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார் என வைஷாலி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் கூறியதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  தேர்தல் நெருங்கும் நேரத்தில் தொடர்ச்சி யாக ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலை வர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதால் வைஷாலி மாவட்டத்தில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முன்னதாக ஆர்ஜேடி கட்சித் தலை வரும், பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி 6 மாதத்தில் 4 முறை விபத்து, குண்டர் களின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூலிப்படையினரை களமிறக்கியுள்ளதா பாஜக?

பீகார் சட்டமன்ற தேர்தலில் தோல்வி பயத்தில் உள்ள பாஜக, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு இடையே கூலிப்படையினரை களமிறக்கி எதிர்க்கட்சிகளை மிரட்டியும், படுகொலை சம்பவங்களை அரங்கேற்றியும்  வருகிறது. ஒரு மாவட்டத்தில் தொகுதி வாரியாக, மக்கள் மன்றத்தில் செல்வாக்காக உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட உள்ளூர் பிரச்சனைகளை பயன்படுத்தி கூலிப்படையினர் மூலம் பாஜக படுகொலைகளை அரங்கேற்றி வருவதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. வைஷாலி மாவட்ட முக்கிய ஆர்ஜேடி தலைவரான ராஜ்குமாருக்கு கொடுக்கல், வாங்கல் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனையை பெரிதாக்கி ராஜ்குமார் கூலிப்படையினர் மூலம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளின் தூண்டுதல் இல்லாமல் இந்த படுகொலை சம்பவம் அரங்கேற வாய்ப்பில்லை என உள்ளூர் மக்களும் குற்றம் சாட்டி யுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.