states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சீவ் ஜா

பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை ஒரு போதும் நிறைவேற்றியது கிடையாது. ஏனென்றால் பாஜகவிற்கு வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் கிடையாது. அதே போல தில்லி மக்களுக்கு பாஜக அளித்த வாக்குறுதிகள் ஒருபோதும் நிறைவேற்றப்படாது.

திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ்

உங்களுக்கு (பாஜக-ஒன்றிய ஆட்சியாளர்கள்) இந்தி தெரியும். நீங்கள் இந்தியில் பேசுறீர்கள். ஆனால் எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்துகிறீர்கள். ஏனென்றால் உங்களுக்கு இந்தி மட்டும்தான் தெரியும். இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி

பாஜக கூட்டணி ஆட்சியால் பீகார் மாநிலம் கல்வியறிவில் கடைசி இடத்திலும், விவசாயிகளின் வருமானத்தில் கடைசி இடத்திலும், வேலையின்மை மற்றும் வறுமையில் மட்டுமே முன்னணியிலும் உள்ளது. பீகாரை முன்னோக்கி கொண்டு செல்ல பாஜக கூட்டணி எதுவும் செய்யவில்லை. பட்ஜெட்டில் கூட ஒன்றிய அரசு பீகாரை வஞ்சித்துள்ளது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு இருக்கும். அந்த கணக்கு தீர்க்கப்படும்.

திரைக்கலைஞர் ஜோ மல்லூரி

தயவு செய்து இளைஞர்களே, உங்கள் வாழ்க்கையில் எந்த நடிகர்கள் பின்னாலும் சென்று விடாதீர்கள். இந்த சமூகத்திற்கு ஒரு புதிய தலைவன் உருவாகிறான் என்றால் அது நடிகனாக இருக்கக் கூடாது. இந்த தலைமுறை அறிவாளிகள் பின்னால் போக வேண்டும்.