states

img

மே மாதம் வருகிறான் மாமனிதன்...

தமிழின் முக்கிய நாயகன் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவரத் தாமதமான நிலையிலிருந்த மாமனிதன் வரும் மே மாதம் 6 ம் தேதி திரையரங்குகளுக்கு வரவிருக்கிறான் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.  யுவன் சங்கர்ராஜா தயாரித்து, தனது தந்தை இளையராஜாவுடன் சேர்ந்து இசையமைத்துள்ள  இந்த மாமனிதனில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம், லலிதா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இது 2019 லேயே முடிந்துவிட்ட நிலையில் வெளியீடு தாமதமாகிக் கொண்டே இருந்தது. இளையராஜாவும் யுவனும் இணைந்து பணியாற்றிய முதல் படமாகவும் இந்த மாமனிதன் நிரம்ப எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறார்.