states

img

மோடி தலைமையிலான ஆட்சி ஒரு ‘அனோகிரசி’ கவர்மெண்ட்!

புதுதில்லி, ஜன.10- நரேந்திர மோடி தலைமை யிலான அரசை ஒரு ‘அனோகி ரசி’ என்று புதிய ஆங்கில வார்த்தை மூலம் சசிதரூர் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவ ரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சசிதரூர் ஆங்கிலப் புலமை மிக் கவர். அவரின் ஆங்கில வார்த் தைப் பயன்பாடுகளும், உச்ச ரிப்பும் ரசிக்கத்தக்க ஒன்றாகும். அரிதான - அதிகம் பயன்படுத்தப் படாத ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி, ‘இதற்கு என்ன அர்த்தம்?’ என்று பலரையும் அக ராதிகளை தேட வைத்து விடுவார். முன்பு, பிரதமர் நரேந்திர மோடியின் நீண்ட தாடி வள ர்ப்பை, ‘போகோனோடிராபி’ என்ற அரிய ஆங்கில வார்த்தை யுடன் குறிப்பிட்டு அவர் வெளி யிட்ட டுவீட் பலரையும், ஆங்கில அகராதியைத் தேட வைத்தது. அதைத்தொடர்ந்து பாஜக-வை விமர்சிப்பதற்கு, ‘அலோ டாக்ஸாஃ போபியா’ (Allodoxa phobia) என்ற வார்த்தையை யும் சசிதரூர் பயன்படுத்தினார். உத்தரப் பிரதேச மக்கள் மீது ‘உபா’ வழக்குகளையும், ‘தேசத் துரோக’ வழக்குகளையும் போடுவதற்கு, பாஜக ஆட்சி யாளர்கள் கருத்துகளைப் பார்த்து பயப்படுகின்றனர். இது தான் ‘அலோடாக்ஸாஃ போபியா’ (Allodoxaphobia) என்று விளக்கம் அளித்தார். அந்த வகையில், தற்போது புதிதாக, மோடி அரசை ஒரு ‘அனோகிரசி’ (ANOCRACY) என்ற வார்த்தை மூலம், டுவிட்ட ரில் விமர்சித்துள்ளார். “அனோ கிரசி (Anocracy) என்பது ஜன நாயகக் கொள்கைகளுடன், சர்வாதிகார அம்சங்களை இணைத்து நடத்தும் ஓர் அர சாங்கம். இந்த அரசாங்கம் தேர் தலை அனுமதிக்கும். எதிர்க்கட்சி கள் போட்டியிட அனுமதிக்கும். ஆனால், குறைந்தபட்ச பொறுப்பு ணர்வுடனேயே செயல்படும்” என்று, அந்த வார்த்தைக்கு அவரே விளக்கமும் அளித்துள் ளார்.