states

img

ரஷ்ய ஜனாதிபதி இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சந்திப்பு

ரஷ்ய ஜனாதிபதி  இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சந்திப்பு

இந்தியா மீதான வரிகளை 50  சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் அந்நாட்டின் முக்கிய அதிகாரிகளை இந்திய பாது காப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவால் சந்தித்துள்ளார்.  ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்க கூடாது. அதன்  மூலம் கிடைக்கும் நிதியானது உக்ரைன்  மீதான ரஷ்யாவின் போருக்கு உதவு கிறது எனக் கூறி, ஏற்கனவே விதித்திருந்த 25 சதவீத வரிகளுடன், கூடுதலாக 25  சதவீத வரியும் விதிக்கப்படுவதாக ஆகஸ்ட் 6 அன்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.  அதன்பிறகு தான் இந்தியா - ரஷ்யா இடையேயான சந்திப்பு நடை பெற்றுள்ளது.  இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு களை மேலும் வலுப்படுத்துவது குறித்து ரஷ்ய பாதுகாப்பு துறை செயலாளர் செர்ஜி ஷோய்கு, ஜனாதிபதி புடின்  ஆகியோருடன் விரிவான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக தெரி விக்கப்பட்டுள்ளது.   அஜித் தோவல் பேசுகையில், “உலகம் தற்போது மிக சிக்கலான சூழலைச் சந்தித்து வருகிறது. நிச்சய மற்ற தன்மைகள் நிறைய உள்ளன. இது போன்ற நேரத்தில் நமது பாரம்பரிய மான மற்றும் சிறப்புரிமை பெற்ற கேந்திர மான உறவுக்கு ஒரு தனித்துவ பங்கு ள்ளது. இந்த உறவை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்து செர்ஜி ஷோய்கு, “ரஷ்யாவும் இந்தியாவும் வலுவான நடை முறையில் சாத்தியமான நட்புறவால் பிணைக்கப்பட்டுள்ளது. பரஸ்பரமான மரியாதை, நம்பிக்கை, இரு புறமும் சமமான நலன்களைப் பரிசீலிப்பது மற்றும் பொது நோக்கங்களை மேம் படுத்துவது என்பதன் அடிப்படையில் இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதே ரஷ்யாவின் முக்கிய நோக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.  ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா - ரஷ்யா உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக புடின் இந்தியாவுக்கு வருவார் எனவும் அதற்கான தேதிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப் பட்டுவிட்டது.  அது குறித்தான விவ ரங்கள் விரைவில் வெளியிடப்படும் என  தோவால் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.