‘இனி நாட்டில் வெறுப்பு பிரச்சாரங்கள் ஆக்ரோஷமாக மாறும்’ : சீத்தாராம் யெச்சூரி எச்சரிக்கை
புதுதில்லி பிப். 27- பிடிஐ செய்தி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பிரசார் பாரதி முறித்துக்கொண்ட நிலையில், பெரும்பாலான ஊடகங்கள் 2024 தேர்தலை நோக்கி நகரும் பொழுது தவறான தகவல் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்களை மூர்க்கத்தனமாக முன்னெடுக்கப் போகின்றன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரசார் பாரதி
இந்தியாவின் பொது ஒலிபரப்பு நிறுவன மான பிரசார் பாரதி நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். நாடாளுமன்றத்தில் தனியாகச் சட்டம் இயற்றப்பட்டு செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனம் ஆகும். பிரசார் பாரதி தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ மூலம் செய்திகள் மற்றும் ஒன்றிய அரசு சம்மந்தமான செய்திகள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.
பிடிஐ, யுஎன்ஐ உடனான தொடர்பு துண்டிப்பு
இந்த பிரசார் பாரதி நிறுவனத்திற்கு செய்தி உதவி அளிக்கும் நிறுவனங்களாக சந்தா அடிப்படையில் பிடிஐ (PTI - Press Trust of India), யுஎன்ஐ (UNI - United News of India) உள்ளன. 2014ஆம் ஆண்டு முதலே சுதந்திரமான செய்தித் தொகுப்பில் மோடி அரசாங்கத்திற்கும் பிடிஐ, யுஎன்ஐ நிறுவனங்களுக்கும் கசப்பான அனுபவங்கள் நகர்ந்து கொண்டிருந்த நிலை யில், நியாயமற்ற சந்தா கட்டணம் (ஆண்டு தோறும் ரூ.15.75 கோடி; அதில் கிட்டத்தட்ட ரூ.9 கோடி பிடிஐ-க்கு கட்டணம் செலுத்த வேண்டும் - ஆதாரம் தி வயர் - 2017) பிரச்சனை யாக இருப்பதாக காரணம் காட்டி 2017-ஆம் ஆண்டு திடீரென பிடிஐ, யுஎன்ஐ நிறுவனங்களு டன் செய்தித் தொடர்பை நிறுத்துமாறு மோடி அரசாங்கம் பிரசார் பாரதி நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
ஆர்எஸ்எஸ் - ஹிந்துஸ்தான் சமாச்சார் - பிரசார் பாரதி
பிடிஐ, யுஎன்ஐ உடனான தொடர்பு துண்டிப்புக்கு பிறகு 2017-ஆம் ஆண்டு முதல் பிரசார் பாரதிக்கு மதிப்பீட்டு அடிப்படையில் தனது வலையமைப்பு சேவைகளை இலவச மாக வழங்கி வரும் இந்துஸ்தான் சமாச்சார் நிறுவனத்துடன் பிரசார் பாரதி தற்போது புதிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இரு நிறுவனங்களுக்கு இடையே 2023 பிப்ரவரி 14 அன்று கையெழுத்தான ஒப்பந்தத்தில் பிரசார் பாரதிக்கு, இந்துஸ்தான் சமாச்சார் நிறுவனம் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 10 தேசிய செய்திகள், பிராந்திய மொழிகளில் 40 உள்ளூர் செய்திகள் வழங்க 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த கட்டணமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்துஸ்தான் சமாச்சாருக்கு ரூ. 7.7 கோடியை பிரசார் பாரதி செலுத்திடஉள்ளது. இந்துஸ்தான் சமாச்சார் என்ற செய்தி நிறு வனமானது ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியான எம்.எஸ்.கோல்வால்கர் உடன் இணைந்து செயல்பட்ட மூத்த ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இணை நிறுவனரு மான சிவராம் ஷங்கர் ஆப்தேவால் 1948-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தேசியவாதம் என்ற பெயரில் மதவாதக் கண்ணோட்டத்தில் செய்திகளை வழங்கும் இந்துஸ்தான் சமாச்சார், திட்டமிட்ட பிரச்சாரப் பணியை மட்டுமே மேற்கொண்டது. நிதி நெருக்கடியால் 1986-ஆம் ஆண்டு நிறுவனத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும் 2002-ஆம் ஆண்டு ஏ.பி. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் சற்று ‘முன்னேற்றம்’ கண்டது. அதன் பிறகு மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசு விளம்பரங்கள் மூலமான வரு வாயால் தொடர்ந்து பயனடைந்து தில்லி அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஜாண்டே வாலனில் உள்ள அதன் சிறிய அலுவலகத்தை, நொய்டாவில் உள்ள பெரிய அலுவலகத்திற்கு மாற்றத் திட்டமிடும் அளவிற்கு வளர்ந்தது.
பிடிஐ உடன் மோதல் ஏன்?
நாடு முழுவதும் 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், எண்ணற்ற பத்திரிகை யாளர்கள், 800 வெளியுலக தொடர்பு உள்ள பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ள உலக தரம் வாய்ந்த செய்தி நிறுவனம் பிடிஐ ஆகும். இது தனது சந்தாதாரர்களுக்கு அனைத்து தலைப்புகளிலும் ஒரு நாளைக்கு சுமார் 1,000 செய்தி, கட்டுரைகளை வழங்குகிறது. மேலும் ஒரு நாளைக்கு 100-க்கும் மேற்பட்ட நேரடி நிகழ்வுகள், 200-க்கும் மேற்பட்ட மூல வீடியோ தொகுப்பு களை ஸ்ட்ரீம் செய்யும் வீடியோ சேவை யை நடப்பு மாதத்தில் அறிமுகப்படுத்தி யது. முக்கியமாக மோடி அரசாங்கத்தால் விரும்பப்படும் மற்றொரு செய்தி நிறு வனமான ANI (Asian News International) நிறுவனத்திற்கு சவால் அளிக்கும் போட்டி நிறுவனமாக உள்ளது. அதன் பிறகு 2016-ஆம் ஆண்டில் பிடிஐ தலைமை ஆசிரி யரான எம்.கே. ரஸ்தான் ஓய்விற்கு பிறகு, தங்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை
பிடிஐ தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என மோடி அரசாங்கம் வற் புறுத்தியது. ஆனால் பிடிஐ, மோடி அர சாங்கத்தின் வற்புறுத்தலை புறக்கணித்து, மிகவும் மதிக்கப்படும் அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகையாளர் விஜய் ஜோஷியை தலைமை ஆசிரியராக நியமித்தது. தலைமை ஆசிரியர் தேர்வில் உடன் படாதது, சந்தா கட்டணம், கட்டட வாடகை கட்டணம் ஆகியவற்றை காரணமாகக் கூறி மத்திய தில்லியில் பிடிஐ கட்டடத்தில் இருந்து இயங்கி வந்த பிரசார் பாரதி அலு வலகத்தை 2017-ஆம் ஆண்டு வெளி யேறும் நிலையை மோடி அரசாங்கம் உரு வாக்கியது. இந்த நிகழ்வுக்குப் பிறகு பிர சார் பாரதி முன்னாள் செயலர்,”பிடிஐ, யுஎன்ஐ உடனான தொடர்பு துண்டிக் கப்பட்டு பிரசார் பாரதிக்கு செய்தி உதவி யாக புதிய ஏஜென்சிகளில் ஒன்றைக் கொண்டுவருவதற்காக மோடி அர சாங்கம்” முயற்சிக்கும் என “தி வயர்” செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தார். மேலும் 2017-ஆம் ஆண்டில் தொடர்ச்சி யான டுவீட்களில் முன்னாள் மத்திய தக வல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சரும், காங்கி ரஸ் தலைவருமான மணீஷ் திவாரி, பிடிஐ, யுஎன்ஐ ஆகியவற்றை அகற்றி இந்துஸ் தான் சமாச்சாரை ஒளிபரப்புக்கான முதன்மை செய்தி நிறுவனமாக சேர்க்க மோடி அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தில் பிர சார் பாரதி இருப்பதாகக் கூறியிருந்தார்.
லடாக் எரிச்சல்
2020-ஆம் ஆண்டு லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அதே ஆண் டில் இந்தியாவிற்கான சீன தூதர் மற்றும் சீனாவுக்கான இந்திய தூதர் ஆகியோரு டன் பிடிஐ நேர்காணல் எடுத்து அதனை செய்தியாக வெளியிட்டது. இந்த விவ காரம் ஒன்றிய அரசை எரிச்சலூட்டியது. மேலும் சீனத் தூதரை நேர்காணல் செய்தி ருக்கக் கூடாது என்றும், சீன ஊடுருவல் குறித்த பிடிஐயின் பேட்டியில் இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரியின் கருத்துகள் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும், ‘தேச விரோத’ அறிக்கைகளை வெளி யிட்ட பிடிஐ-யுடன் இனி உறவைத் தொடர முடியாது என பெயர் குறிப்பிட விரும் பாத பிரசார் பாரதி அதிகாரி ஒருவர் கூறி யிருந்தார். தொடர்ந்து பிரசார் பாரதியின் மூத்த அதிகாரி சமீர் குமார்,”லடாக் நிலைப்பாடு குறித்த சமீபத்திய செய்தி தேசிய நலனுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், குழிபறிப்ப தாகவும் உள்ளதாகவும் உள்ளது” என பிடிஐ நிறுவனத்தை எச்சரித்து அந்நிறு வனத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். பிடிஐ-யை நீக்கிவிட்டு அதற்குப் பதி லாக அதிகம் அறியப்படாத இந்துஸ்தான் சமாச்சாருடன் அதிகாரப்பூர்வமாக ஒப் பந்தம் செய்திருக்கும் நடவடிக்கையானது பிடிஐ-யை பலவீனப்படுத்தும் திட்டமாகும். நாட்டிலேயே மிகப்பெரிய நிருபர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களின் வலையமைப்பைக் கொண்ட பிடிஐ-யை புறக்கணித்து இந்துஸ்தான் சமாச்சாரை நியமித்திருப்பதன் மூலம், தனியார் வலதுசாரி ஊடகங்களுக்கு ஒரு பரந்த வாய்ப்பை வழங்க அரசாங்கம் திட்ட மிட்டுள்ளதை வெளிப்படையாக காண முடி கிறது.
2024 தேர்தலுக்கு குறி
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி டுவிட்டர் பக்கத் தில்,”பிடிஐ உடனான ஒப்பந்தத்தை பிர சார் பாரதி முறித்துக்கொண்ட நிலையில், இனி தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ அதிகாரப்பூர்வமாக ஆர்எஸ்எஸ் உள்ளடக்கத்தை மட்டுமே செய்திகளாக ஒளிபரப்பும். செய்தி ஊட்டத்தை வழங்கு வதற்காக விஎச்பியின் நிறுவனர் கோல் வால்கர் மற்றும் ஆப்தேவால் நிறு வப்பட்ட இந்துஸ்தான் சமாச்சார் உடன் புதிய ஒப்பந்தத்தை பிரசார் பாரதி ஏற் படுத்திக் கொண்டுள்ளது. சில விதிவிலக்கு களை தவிர பெரும்பாலான ஊடகங்கள் 2024 தேர்தலை நோக்கி நகரும் பொழுது தவறான தகவல் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்களை மூர்க்கத்தனமாக முன்னெ டுக்கப் போகின்றன” எனக் கூறியுள்ளார்.