திருப்பதி கோவிலில் ரூ.100 கோடி திருட்டு? ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு
அமராவதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தில் 2019 முதல் 2024 வரை முதலமைச்சராக இருந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் திருமலை திருப்பதி கோவில் உண்டியல் பணம் ரூ.100 கோடி திருடப்பட்டதாக அம்மாநில பாஜக தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி வீடியோ மூலம் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஆந்திர மாநிலத்தில் தங்களது ஆட்சியின் தோல்வியை மறைக்க மற்றும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் திருப்பதி கோவிலில் ரூ.100 கோடி திருட்டு என்று கூறி வருகிறார்கள். 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீவாரி ஹம்பியின் உண்டியல் பணத்தி லிருந்து அமெரிக்க டாலர்களை திருமலை திருப்பதி கோவில் ஊழி யர்கள் திருடினர். இதுகுறித்து வெளிப்படையாக விசாரணை நடத் தப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவருக்கும், அவரது குடும்பத்துக்கும் சொந்தமான ரூ.14.43 கோடி மதிப்புள்ள சொத்து கள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக் கப்பட்டது. இந்த வழக்கில் அனைத்தும் மிகத்தெளிவாக இருக்கிறது. ஆனால் வேண்டும் என்றே முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, லோகேஷ் (அவரது மகன் - ஆந்திர அமைச்சர்) இருவரும் உண்மையைத் திரித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திருப்புகி றார்கள். மக்கள் மிகவும் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும். தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் ஆன்மீகத் தலங்களின் பெயர்களை, அவர்களது அரசியல் லாபத்துக்காகப் பயன் படுத்தி குற்றச்சாட்டுகளை புனைகிறார் கள் என்பதை ஆந்திர மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது. ஏன் பாஜக பெயரை உச்சரிக்க மாட்டார்களா? திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.100 கோடி பணம் திருடப்பட்டதாக குற்றம்சாட்டியவர் பாஜக தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி. இவர் திருமலை தேவஸ்தான உறுப்பினராக உள்ளார். ஆனால் பானு பிரகாஷ் ரெட்டி பற்றியோ, அவரது கட்சி (பாஜக) பற்றியோ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனது கண்டன அறிக்கையில் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. பாஜக என்றாலே ஒய்எஸ்ஆர் காங்கி ரஸ் பயப்படுகிறதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. சமீபத்தில் கூட துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி வேட்பாளர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் (சுதர்சன் ரெட்டி) என்றாலும், அவரை ஆதரிக்காமல் பாஜக வேட்பாளரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆத ரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.