states

img

இமாச்சலுக்கு மீண்டும் ரெட் அலர்ட்

இமாச்சலுக்கு மீண்டும் ரெட் அலர்ட்

மேகவெடிப்புக்கு 69 பேர் பலி ; 37 பேர் மாயம் ; 110 பேர் காயம்

கடந்த 2 வாரத்தில் அடுத்த டுத்து மேகவெடிப்பை எதிர்கொண்ட இமய மலைச்சாரலில் உள்ள இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு மீண்டும் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். 13 நாட்கள் இடைவெளியில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கங்க்ரா மற்றும் மண்டி மாவட் டங்களில் ஏற்பட்ட 2 மேகவெடிப்பு சம்பவங்களில் சிக்கி இதுவரை 69 பேர் பலியாகியுள்ளனர். 37 பேரை காணவில்லை. 110 பேர் காய மடைந்துள்ளனர். இந்த மேகவெ டிப்பு சம்பவம் நிகழ்ந்து நாட்கள் ஆகிவிட்டதால் காணாமல் போன 37 பேரில் பலர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத வகை யில் அடுத்தடுத்து ஏற்பட்ட மேக வெடிப்புச் சம்பவங்களால் இமாச்ச லப் பிரதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலை யில், ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் கங்க்ரா, சிர்மவுர், மண்டி மாவட் டங்களில் கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது  இந்திய வானிலை ஆய்வு மையம். அதே போல உனா, பிலாஸ்பூர், ஹமீர்பூர், சம்பா, சிம்லா, குலு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மாநில அரசு அதி காரிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது.  ஜூலை 9 வரை மாநிலத்தில் கடுமையான மழை பெய்ய வாய்ப் புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சிம்லா பிரிவும் கூறியுள்ளதால் இமாச்சல் மாநிலத் தில் பதற்றமான சூழல் நிலவி வரு கிறது.

மாதம் ரூ.5,000 நிவாரணம் : இமாச்சல் அரசு அறிவிப்பு

பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் 60% பகுதிகள் உருக்குலைந்துள்ளன. இதனால் காங்கிரஸ் ஆளும் இமாச்சல்பிரதேச அரசு நிவாரண நடவடிக்கையாக வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட மற்றும் மோசமாக இடிந்து விழுந்த வீடுகளின் குடும்பங்களுக்கு மாதத் திற்கு ரூ.5,000 வழங்க முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சாஹு வெளியிட்டுள்ளார்.