எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை கண்காணிக்கும் ராஜஸ்தான் அரசு ராஜஸ்தான்
மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தில் சபாநாயகராக இருக்கும் வாசுதேவ் தேவ்னானி எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை ரகசிய கேமராக்கள் மூலமாக கண்காணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பெண் எம்எல்ஏக்களான சிம்லா தேவி நாயக், கீதா பர்வார் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது,”சட்டமன்றத்தில் சட்டவிரோதமாக பெண்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை சபாநாயகர் வாசுதேவ் தேவ்னானி கண்காணித்து வருகிறார். இதற்கு யார் அனுமதித்தது என்று தெரியவில்லை. ஆனால் ராஜஸ்தான் பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசலால் பயந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக் களை கண்காணிக்கும் வேலையை தொடங்கியுள்ளனர்” என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதசாரா கூறு கையில்,”ராஜஸ்தான் பாஜக அரசாங் கம் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கண்கா ணிக்கவும், உரையாடல்களை ஒட்டு கேட்கவும் விரும்புகிறது. இந்த உளவு வேலை மோடி அரசு, முதலமைச்சர் (பஜன் லால் சர்மா) மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் உத்தரவின் பேரில் செய்யப்படுகிறது. இதற்கு எதிராக ஆதாரத்துடன் புகார் அளிப்போம்” என கூறியுள்ளார்.