states

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆவேச முழக்கம்

புதுதில்லி, ஏப்.4- பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதை யடுத்து திங்களன்று அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொட ரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், திங்களன்று காலை  மாநிலங்களவை கூடியவுடன், பெட்ரோல் விலை உயர்வு குறித்து விவாதிக்க எதிர்க் கட்சிகள் கோரிக்கை முன்வைத்தன. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க  அவைத் தலைவர் மறுத்ததால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர் கள் விலை உயர்வு பற்றி விவாதிக்க வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதை யடுத்து, பகல் 12 மணி வரை அவையை அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஒத்தி வைத்தார். தொடர்ந்து, பகல் 12 மணிக்கு அவை கூடியவுடன், அவைத் தலைவர் இருக்கை க்கு முன்பு வந்த எதிர்க்கட்சியினர் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக முழக்கமிட்ட னர். இதனால், அவை பிற்பகல் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. நாடு முழுவதும் கடந்த 14 நாள்களில் 12 முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி யிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு : ஒரு பார்வை

கடந்த 14 நாட்களில், தலைநகரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.40 அதிகரித்துள்ளது. நான்கு மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இந்த விலைகள் முதல் முறையாக மார்ச் 22 அன்று மாற்றியமைக்கப்பட்டது. திங்கள்கிழமை, தில்லியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 40 காசுகள் மீண்டும் உயர்த்தப்பட்டது. தில்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.103.81 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.95.07 ஆகவும் உள்ளது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்ட ருக்கு ரூ.118.83 ஆகவும், டீசல் விலை  லிட்டருக்கு ரூ.103.07 ஆகவும் உயர்த்தப் பட்டுள்ளது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.113.45 ஆகவும், டீசல் விலை ரூ.98.22 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.109.34 ஆகவும், டீசல் விலை ரூ.99.42 ஆகவும் உள்ளது. ‘கிரிசில்’ எனப்படும் முதலீடுகள் தொடர் பான பகுப்பாய்வு நிறுவனம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.9 முதல் ரூ.10  வரை அதிகரிக்கலாம் எனக் கணித்திருந் தது. அவர்களது கணிப்பு ஓரிரு தினங்களில் உண்மையாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு 110 முதல்  120 டாலர் வரை அதிகரிக்கும் போது, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.15  முதல் ரூ.20 வரை அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது.

முக்கிய நகரங்களில் (திங்களன்று பெட்ரோல், டீசல் விலை)

                    பெட்ரோல் (ரூ/லிட்டர்)      டீசல் (ரூ/லிட்டர்)                       

புதுதில்லி                 103.81                              95.07
மும்பை                      118.83                            103.07
கொல்கத்தா               111.35                            98.22
சென்னை                    109.34                           99.42
பெங்களூரு                 109.41                           93.23

ஹைதராபாத்              117.68                         103.75
பாட்னா                         114.57                          99.47
போபால்                        116.40                         99.51
ஜெய்ப்பூர்                      116.27                         99.29
லக்னோ                        103.65                          95.23