states

img

பிரிட்டிஷார் - சாவர்க்கர் மட்டுமே பிரிவினையை ஆதரித்தனர் சிபிஎம் எம்எல்ஏ முகமது யூசுப் தரிகாமி பேச்சு

பிரிட்டிஷார் - சாவர்க்கர் மட்டுமே பிரிவினையை ஆதரித்தனர் சிபிஎம் எம்எல்ஏ முகமது யூசுப் தரிகாமி பேச்சு

குல்காம் பிரிட்டிஷார் - சாவர்க்கர் மட்  டுமே சுதந்திர போராட்டத் தின் போது பிரிவினையை ஆதரித்தனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், ஜம்மு-காஷ்மீ ரின் குல்காம் தொகுதி எம்எல்ஏவு மான முகமது யூசுப் தரிகாமி குற் றம்சாட்டியுள்ளனர்.  ஒன்றிய பாஜக அரசின் பெட் ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் ‘சுதந்திர நாள்’  போஸ்டர்  சமூக வலைத்தளங்க ளில் வலம் வருகிறது.அதில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பகத்  சிங் ஆகியோரைவிட அதிகம் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர் என்று உருவாக்கும் வகையில் வி.டி. சாவர்க்கர் முன்னிறுத்தி  போஸ்டரை வெளியிட்டுள்ளார் கள். இதற்கு எதிராக நாடு முழுவ தும் கண்டனம் குவிந்து வருகிறது. இந்நிலயில், இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு முக மது யூசுப் தரிகாமி அளித்த பேட்டி யில்,”பிரிட்டிஷார் பிரிவினையை ஆதரித்தனர். அதில் எந்த சந்தேக மும் இல்லை. இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் அதை எதிர்த்தது. மேலும் பிரிவினையை ஆதரித்த ஒரே முக்கிய நபர்,  இப்போது ஆர்எஸ்எஸ் வட்டாரங்க ளில் ஒரு முக்கியமான நபராகக் கருதப்படும் சாவர்க்கர் மட்டுமே. மதத்தின் அடிப்படையில் இந்துக் கள் தனி, முஸ்லிம்கள் தனி என்று அவர் அப்போதும் கூறியிருந்தார். இன்றும் கூட, நாடு முழுவதும் இதே கதை மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. உண்மையான கேள்வி என்னவென்றால், தேசம்  என்ற கருத்தாக்கத்திலும், தேசத்தை உருவாக்குவதிலும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்  கும் உள்ள பங்கை தனித்தனியாகப்  பார்க்க வேண்டுமா? இல்லை, சுதந்  திர வரலாற்றில் நாட்டு மக்கள்  அனைவரும் சேர்ந்தே பங்காற்றி யிருக்கிறார்கள். இதுதான் உண்மை” என அவர் கூறியுள்ளார்.