states

img

200 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கிய ‘ஓலா’ வாகனப் போக்குவரத்து நிறுவனம்!

புதுதில்லி, ஜன. 14- ‘ஓலா’ நிறுவனமானது, தனது ‘டெக்’ மற்றும் ‘புரா டக்ட்’ பிரிவுகளில் வேலை செய்  யும் 200-க்கும் மேற்பட்ட ஊழி யர்களை வேலையை விட்டு நீக்  குவதாக அறிவித்துள்ளது. 2023-ஆம் ஆண்டில் உலக ளாவிய அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று கணிப்புகள் வெளியானதால், அதனை எதிர்கொள்வதற்கு இப்போதிருந்தே செலவைக் குறைக்கிறோம் என்ற பெயரில்,  கார்ப்பரேட் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. மைக்ரோசாப்ட், டுவிட்டர், அமேசான் உள்ளிட்ட பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கி, இந்தியாவிலும் பல  நிறுவனங்கள் கடந்த சில மாதங்  களாக தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு  வருகின்றன. அண்மையில்,  அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் 18 ஆயிரம் ஊழி யர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்தது.

இந்தி யாவில் மட்டும் சுமார் 1,000 ஊழி யர்களைப் பணி நீக்கம் செய்  தது. இந்த வரிசையில், ‘ஓலா’  நிறுவனமும் தற்போது ஆட் குறைப்பு நடவடிக்கையை அறி வித்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த  முன்னணி வாகனப் போக்கு வரத்து நிறுவனமான ‘ஓலா’ தனது ‘டெக்’ மற்றும் ‘புரா டக்ட்’ பிரிவுகளில் வேலை செய்  யும் 200-க்கும் மேற்பட்ட ஊழி யர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளது. ‘ஓலா கேப்ஸ்’, ‘ஓலா எலக்ட்ரிக்’ மற்றும் ‘ஓலா நிதிச் சேவை’ ஆகி யவற்றில் வேலை செய்யும் ஊழி யர்கள் இந்த பணி நீக்கம் நட வடிக்கையால் பாதிக்கப்பட் டுள்ளனர். நிறுவனத்தை மறு கட்ட மைப்பு செய்து வேலைத் திறனை மேம்படுத்தவே இந்த நட வடிக்கை மேற்கொள்ளப்படு வதாக ஓலா செய்தித் தொடர்பா ளர் கூறியுள்ளார். 2021-ஆம் நிதியாண்டில் ‘ஓலா’ நிறுவனம் ரூ. 689.61 கோடி  வருவாய் ஈட்டியுள்ளது. இது  முந்தைய ஆண்டை காட்டிலும் 65 சதவிகிதம் குறைவாகும். 2021  ஆண்டில் ரூ. 610.18 கோடி இழப்பை சந்தித்த ஓலா நிறு வனம் 2022-ஆண்டில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழி யர்களை வேலையை விட்டு நீக்கியிருந்தது.