பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட 15 சிறுமி வயது பலி
பாலியல் குற்றவாளிகளை காக்கும் ஒடிசா பாஜக அரசு
ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த வுடன் பெண்கள், சிறுமி களுக்கு எதிரான பாலியல் குற் றங்கள் மிக மோசமான அள வில் அதிகரித்து வருகின்றன. கடந்த 40 நாட்களில் 8க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், சிறு மிகள் பாலியல் வன்கொடுமை யால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒரு சிறுமி கொடூரமாக பாலி யல் வன்கொலை செய்யப்பட் டார். குறிப்பாக கடந்த ஜூன் மாதம் பாலசோரில் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்த லால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்ப வத்திற்கு எதிராக மாநிலம் முழு வதும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என 8க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து முழு அடைப்பு போராட்டங்களை நடத்தின. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை மர்ம நபர்கள் தீ வைத்துக் கொளுத் திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பூரி மாவட்டம் பலங்கா அருகே பயாபர் கிராமத்தில் சிறுமி தோழியின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, 3 மர்ம நபர்கள் சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாகவும், சம்பவத்திற்குப் பிறகு அங்கிருந்து தப்பி ஓடிய தாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையி னரிடம் சாட்சியமும் அளித்த னர். சிறுமி 75% தீக்காயங்களு டன் புவனேஸ்வரம் எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்ஸிஜன் உதவியுடன் உயிருக்கு ஆபத் தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின், அவர் மேம்பட்ட சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சனிக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். தாயாரின் புகார் புறக்கணிப்பு சிறுமி உயிருக்கு போராடிய போதே பலங்கா காவல் நிலை யத்தில் சிறுமியின் தாயார் அளி த்த புகாரில், தனது மகளை 3 பேர் கடத்திச் சென்று, பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தாகக் குற்றம் சாட்டினார். பாலி யல் வன்முறையால் சிறுமி இந்த நிலைக்குச் சென்றார் என குற் றச்சாட்டுகளும் எழுந்தன. ஆனால் ஒடிசா காவல் துறை 15 வயது சிறுமி மர ணத்தில் யாருக்கும் தொடர்பு இல்லை என குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்தில் அறிக்கை வெளியிட்டு சர்ச்சை யை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ஒடிசா காவல்துறை தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத் தில்,”பலங்கா சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி இறந்த செய்தியைக் கேட்டு நாங்கள் மிகவும் வருத்தமடைந்தோம். காவல்துறையினர் மிகுந்த நேர்மையுடன் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விசா ரணை இறுதிக் கட்டத்தை எட்டி யுள்ளது. இதுவரை நடத்தப் பட்ட விசாரணையின்படி, வேறு யாரும் இதில் ஈடுபடவில்லை என்பது தெளிவாகிறது” எனக் கூறியுள்ளனர். பெட்ரோல் ஊற்றி எரிக்கப் பட்ட 15 வயது சிறுமி பலியான விவகாரத்தில் பாலியல் குற்ற வாளிகளை காக்கும் ஒடிசா பாஜக அரசின் செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்ட னம் தெரிவித்து வருகின்றனர்.