states

img

ஒன்றிய அரசுக்கு ஈவுத்தொகை ரூ.49,000 கோடியை அள்ளிக்கொடுத்த பொதுத்துறை நிறுவனங்கள்!

என்.பி.சி.சி. நிறுவனம் டிசம்பர் காலாண்டில்  ரூ.87 கோடி லாபம்!

நாட்டின் ‘நவரத்னா’  பொதுத்துறை  நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவது ‘நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் கார்ப்பரேஷன்’ (NBCC ) ஆகும். திட்ட மேலாண்மை ஆலோசனை மற்றும் ரியல் எஸ்டேட் வணிகத்தில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், என்பிசிசி நிறுவனம், தனது 2021 - 22 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டு (அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான) நிதி நிலை முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இதில், என்.பி.சி.சி. நிறுவனம் 2021 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ. 87 கோடியே 03 லட்சத்தை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

புதுதில்லி, மார்ச் 12- பொதுத்துறை நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ. 49 ஆயிரத்து 59 கோடியை, ஒன்றிய அரசுக்கு ஈவுத்தொகை யாக (Dividend) வழங்கியுள்ளன. இதுகுறித்து முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின் (DIPAM) செயலா் துகின் காந்த பாண்டே டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒன்றிய அரசின் பங்கு மூல தனத்துக்கு பொதுத் துறை நிறு வனங்கள் வழங்க வேண்டிய ஈவுத்தொகை நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ. 49 ஆயிரத்து 059 கோடி பெறப்பட்டுள்ளது. நால்கோ (NALCO) நிறுவனம் ரூ. 283 கோடியும், பிபிசிஎல் (BPCL) ரூ. 575 கோடியும், எம்எஸ்டிசி  (MSTC) ரூ. 30 கோடியும் ஈவுத் தொகையாக வழங்கியுள்ளன. என்பிடிபிசி (NTPC) நிறுவனத்தி டமிருந்து  மொத்தம் இதுவரை ரூ. 1,982 கோடி பெறப்பட்டுள்ளது. அதேபோன்று, ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்’ (IOC) நிறுவனத்திட மிருந்து ரூ. 1,939 கோடி பெறப் பட்டுள்ளது. இவைதவிர, என்எச்பிசி (NHPC) நிறுவனத்திடமிருந்து ரூ.  934 கோடி, கெயில் (GAIL )நிறு வனத்திடமிருந்து ரூ. 914 கோடி, ‘ஆயில் இந்தியா’ (Oil India) நிறு வனத்திடமிருந்து ரூ. 353 கோடி ஈவுத்தொகை பெறப்பட்டுள்ளது. இவ்வாறு துகின் காந்த பாண்டே கூறியுள்ளார்.