புதுதில்லி, மே 16- கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்வாகிறார். நிர்மலா சீதாராமனின் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக்காலம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடத்தில் நிர்மலா சீதாராமனை நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது.