states

அமலுக்கு வந்தது  புதிய குடியேற்ற சட்டம்

அமலுக்கு வந்தது  புதிய குடியேற்ற சட்டம்

வெளிநாட்டினர் வருகையை முறைப்படுத்த பாஸ் போர்ட் சட்டம், வெளி நாட்டினர் பதிவு சட்டம், வெளிநாட்டினர் சட்டம், குடியேற்றச் சட்டம் போன்றவை அமலில் இருந்தன. அவை ஒன்றி ணைக்கப்பட்டு புதிய குடியேற்ற மசோதா 2025 வரையறுக்கப்பட்டது. இந்த மசோ தா கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதைத் தொ டர்ந்து புதிய குடியேற்ற சட்டம் 2025 நாடு முழுவதும் திங்களன்று அமலுக்கு வந்தது. இனி இந்த சட்டத்தின் மூலம் போலி பாஸ்போர்ட், போலி விசா மூலம் இந்தி யாவுக்குள் நுழைந்தால் 7 ஆண்டுகள் சிறை, ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.