states

பேச்சுவார்த்தை குழு அமைப்பு

புதுதில்லி,டிச.4-  கடந்த ஓராண்டாக விவசாயிகள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்திற்கு பணிந்து விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை மோடி அரசு வாபஸ் பெற்றது.  ஆனால் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் சில முக்கிய கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் அறிவித்து, போராட்டத் தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை விவசாய அமைப்புகள் அமைத்துள் ளன. விவசாயிகள் சங்க தலைவர்கள் அசோக் தாவ்லே,  பல்பீர்சிங் ராஜேவால், ஷிவ்குமார், குர்னாம் சிங், யுத்வீர் சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

;