states

img

உலக புகழ்பெற்ற தசரா விழா இன்று தொடக்கம் முஸ்லிம் எழுத்தாளர் தொடங்கி வைக்கிறார்

உலக புகழ்பெற்ற தசரா விழா இன்று தொடக்கம் முஸ்லிம் எழுத்தாளர் தொடங்கி வைக்கிறார்

பெங்களூரு கர்நாடகத்தில் கொண்டா டப்படும் பண்டிகைகளில் முதன்மையானது தசரா விழா ஆகும். கர்நாடகத்தின் ‘நாட ஹப்பா’ என அழைக்கப்படும் இந்த தசரா விழா கலாச்சாரம், பண் பாட்டை பிரதிபலிக்கும் வகையில் மன்னர் காலத்தில் இருந்து கொண் டாடப்பட்டு வருகிறது. இதில் மைசூருவில் கொண்டாடப்படும் தசரா விழா உலக புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்நிலையில், வரலாற்று சிறப்புமிக்க தசரா விழாவின் 415 ஆவது ஆண்டின் கொண்டாட்டம் திங்களன்று முதல் துவங்குகிறது. அக்டோபர் 2ஆம் தேதி வரை 11 நாட்கள் கோலாகலமாக நடை பெறும் இந்த விழாவை ‘புக்கர்’ விருது பெற்ற கன்னட எழுத்தா ளர் பானு முஷ்தாக் சாமுண் டீஸ்வரி அம்மன் மீது மலர்களை தூவி தசரா விழாவை தொடங்கி வைக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மைசூரு தசரா விழாவை பொது வான நபர், பிரபலங்கள் தொடங்கி வைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பாஜகவின் எதிர்ப்பு க்கு மத்தியில் எழுத்தாளர் பானு முஷ்தாக் தசரா விழாவை தொ டங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.