states

img

கடத்தல் மையமாக மாறும் மும்பை விமான நிலையம்

கடத்தல் மையமாக மாறும் மும்பை  விமான நிலையம்

நாட்டின் முக்கிய விமான நிலை யங்களில் ஒன்று மும்பை (மகாராஷ்டிரா) சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலை யம் ஆகும். அனைத்து நாட்டின் விமான சேவைகள் இருப்பதால் மும்பை சர்வ தேச விமான நிலையம் எப்போதும் பர பரப்பாகவே இயங்கும். ஆனால் சமீப காலமாக மும்பை விமான நிலையம் கடத்தல் கும்பல்களின் முக்கிய மைய மாக விளங்கி வருகிறது. கடந்த செப்டம் பர் மாதத்தில் மட்டும் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் சுமார் ரூ.22 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். “ஆபரேஷன் வீட் அவுட்” என்ற பெயரில் வருவாய் புலனாய்வு இயக்கு னரக அதிகாரிகள் நடத்திய ஒருங்கி ணைந்த சோதனையில் 39.2 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா, கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல் பொருட்கள் தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த விமானங்களில் இருந்து அதிகளவில் கைப்பற்றப்பட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன.