புதுதில்லி, ஜூலை 19 - இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் சரி வினைக் காணலாம் என பல்வேறு தரமதிப்பீட்டு நிறுவனங்கள் கணிப்பு களை வெளியிட்டு வருகின்றன. ‘நோமுரா’ நிறுவனம், அண்மையில் 2022-2023 நிதி யாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி கணிப்பை 4.7 சதவிகிதமாக குறைத்தது. முன்பு அதனை 5.4 சதவிகிதம் அளவிற்கு இருக்கும் என்று ‘நோமுரா’ கணித்திருந்தது. அதைத் தொடர்ந்து, தற்போது மார்கன் ஸ்டான்லி ஆய்வு நிறு வனமும் தனது பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்பை மாற்றியமைத்துள்ளது.
2022 - 2023ம் நிதியாண்டில், இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதமாக இருக்கும் என்று மார்கன் ஸ்டான்லி ஆய்வு நிறு வனம் முன்பு கூறியிருந்தது. தற்போது அதனை 40 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 7.2 சதவிகிதம் என்று மாற்றியமைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சி ஒரு வருடத்தில் இல்லாத 4.1 சதவிகிதம் என்ற மிகக் குறைந்த அளவாக பதிவாகி யுள்ளது. இதன் பின்னணியிலேயே தங்களின் முந்தைய கணிப்பான 7.6 சதவிகிதத்தை தற்போது, 7.2 சதவிகிதமாக குறைத்துள்ளனர். அடுத்த ஆண்டும் (2023-24), இந்தி யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.4 சதவிகிதம் என்ற அளவிற்கு குறையும் என்று மார்கன் ஸ்டான்லி ஆய்வு கணித்துள்ளது. இந்தியாவின் சில்லரைப் பண வீக்கம், கடந்த பல வருடங்களில் இல்லாத அளவிற்கு உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் அது 7.1 சதவிகிதத்தைத் தொட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் என்றே தர மதிப்பீட்டு நிறுவனங்கள் கூறு கின்றன. அதற்கேற்ப, இப்போது வரை உணவுப் பொருட்களின் விலை, அதிகரித்தே காணப்படு கின்றன. இப்போதைக்கு அது குறையாது என்பதையே பணவீக்க மதிப்பீடுகள் காட்டுகின்றன.