states

img

அதானிக்கு ஆதரவாக விதிகளை மாற்றுகிறார் மோடி

அதானிக்கு ஆதரவாக விதிகளை மாற்றுகிறார் மோடி

புதுதில்லி பாஜக ஆளும் மகா ராஷ்டிரா மாநி லம் மும்பை கல்யாண் அருகே பிரதமர் மோடியின் நெருங்கிய நண் பரான அதானி, புதிதாக சிமெண்ட் நிறுவன (அம்பு ஜா) ஆலை அமைக்க உள் ளார். இந்த ஆலை தொ டங்கப்பட்டால் கல்யாண் பகுதி கடுமையான சுற்றுச் சூழல் பாதிப்பை எதிர் கொள்ளும் என சிமெண்ட் ஆலை தொடர்பான கருத்து கேட்புக் கூட்டத்தில் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்து, போராட்ட எச்சரிக்கை யும் விடுத்தனர். இதனால் மிரண்டு போன மோடி அரசு பொதுமக்களின் போராட் டத்தை தவிர்க்க அதானி க்கு ஆதரவாக சுற்றுச்சூழல் விதியையே மாற்றியுள்ளது.  இதுதொடர்பாக ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், “சிமெ ண்ட் ஆலை தொடங்கப் பட்டால் மற்றும் ரயில் அல்லது மின் வாகனங்கள் மூலம் மூலப்பொருட்கள் அல்லது இறுதி தயாரிப்புப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால், சுற்றுச் சூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது. இது அதானிக்காக திருத்தப் பட்ட விலக்கு என நாடு முழு வதும் பரவலாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.  இந்நிலையில், மோடி அரசின் இந்த அடாவடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் மத்தியக்குழு தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “அதானிக்கு எதிராக விதி கள் இருக்கும் போது, மோடி விதிகளை மாற்றுகிறார்.  மோடியின் ஒரே குறிக் கோள் அதானியின் ஆதரவு மற்றும் அதானியின் வளர்ச்சி மட்டுமே. இந்த அரசாங்கம் யாருக்காக வேலை செய்கிறது என்பது தெளிவாகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.