புதுதில்லி, பிப்.5- ஜனவரி 26 அன்று தில்லியில் நடை பெற்ற குடியரசு தின கொண்டாட் டத்தில் 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே ஒன்றிய பாஜக அரசு அனுமதி வழங்கியது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அலங்கார ஊர்தி களுக்கு அனுமதியளிக்கவில்லை. பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதி ராக வீரஞ்செறிந்த யுத்தம் நடத்தி தங்க ளின் இன்னுயிரை ஈந்த வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோத ரர்கள், கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமைக்குரிய வ.உ. சிதம்பரனார், மகாகவி பாரதி ஆகியோரின் தியா கங்களை எடுத்துக்காட்டும் உள்ள டக்கங்கள் தமிழ்நாட்டு அரசின் ஊர்தி யிலும், புகழ்பெற்ற சமூக சீர்திருத்த வாதியான நாராயண குரு, மகாகவி ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் வடி வங்கள் கேரள மற்றும் மேற்குவங்க மாநில ஊர்திகளிலும் இடம்பெற்றி ருந்தன.
இவ்வாறு தேசபக்தர்களை போற்றும் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுத்துவிட்ட மோடி அரசு, மறுபுறத்தில், பத்ரிநாத் கோயில் வடி வம் இடம்பெற்ற உத்தரகண்ட் மாநில ஊர்தி, அனுமன் சிலை இடம்பெற்ற கர்நாடக மாநில ஊர்தி, காசி விஸ்வ நாதர் கோயில் வளாகம் இடம்பெற்ற உ.பி. மாநில ஊர்தி, மாட்டுச்சாணத் திட்டம் குறித்து விளக்கும் சத்தீஸ்கர் மாநில ஊர்திகளுக்கு அனுமதி வழங்கி, குடியரசுத் தினத்தையும், நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்களையும் அவமதித்தது. தற்போது, குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தி களில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஊர்தியே சிறந்த அலங்கார ஊர்தி என்றும் அறிவித்துள்ளது. உ.பி. மாநில ஊர்தியில் காசி விஸ்வநாதர் ஆலயம் இடம்பெற்றி ருந்த நிலையில், அனுமன் சிலை இடம்பெற்ற கர்நாடக மாநில ஊர் திக்கும் இரண்டாவது சிறந்த ஊர்தி என்ற பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவே, சிறந்த ஊர்திகளை தேர்ந்தெ டுத்ததாக கூறினாலும், இந்த விவ காரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மக்களின் வாக்கு களை கவருவதற்காகவே, உ.பி. மாநில ஊர்திக்கு, சிறந்த ஊர்திக்கான பரிசு கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதற்கேற்ப, மக்கள் விருப்பத் தேர்வுப் பிரிவில் மகாராஷ்டிரா மாநில அலங்கார ஊர்தியே வெற்றி பெற்றுள்ளது. இதற்கான ஆன்லைன் வாக்கெடுப்பு ஜனவரி 25 முதல் 31 வரை நடத்தப்பட்ட நிலையில், ‘பல்வகைமை மற்றும் மாநில உயிர் சின்னங்கள்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்டிருந்த மகாராஷ்டிர மாநில அலங்கார ஊர்தியை அதிக ளவில் வாக்களித்து மக்கள் தேர்ந்தெ டுத்துள்ளனர்.