states

img

மசூதி முன்பு அனுமன் பாடல்களை ஒலிபரப்பிய ராஜ் தாக்கரே கட்சி!

மும்பை, ஏப். 4 - மகாராஷ்டிர மாநி லத்தில் கடந்த சனிக்கிழமை புத்தாண்டு பிறப்பு (குடி பட்வா) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா மைதானத்தில் பேசிய மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா-வின் (MNS)  தலைவர் ராஜ் தாக்கரே, “மசூதிகளில் ஒலி பெருக்கிகள் (Loud Spea kers) ஏன் அதிக ஒலியில் ஒலிக்கப்படுகின்றன?. இதை மகாராஷ்டிர அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மசூதி களுக்கு வெளியே ஒலி பெருக்கி வைக்கப்பட்டு அனுமன் பாடல்கள் அதிக ஒலியில் ஒலிக்கப்படும்” என்று மிரட்டல் விடுத்திருந் தார். அதன்படியே, மும்பை  காட்கோபரில் உள்ள மகா ராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சி அலுவலகத்தில் ஒலி பெருக்கிகளை  வைத்து அனுமன்  பாடல் கள் சத்தமாக இசைக்கப் பட்டது. இதனையடுத்து அனுமதி இல்லாமல் ஒலி பெருக்கிகளை வைத்ததற் காக நவ நிர்மான் சேனா கட்சியின் மகேந்திர  பானு ஷாலியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விடுவித்தனர். ராஜ் தாக்கரே கட்சி நடவடிக்கையை விமர்சித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “முதலில் பாஜக ஆளும் மாநிலங் களில் ஆசான் (azan) நிறுத்தப்பட்டது, மசூதிகளி லிருந்து ஒலி பெருக்கிகள் அகற்றப்பட்டன. ஆனால், இது மகாராஷ்டிரா, இங்கு  நாட்டின் சட்டமே பின் பற்றப்படுகிறது” என்று தெரி வித்துள்ளார்.