states

ஐபிஎல் : உலக சாதனையை தவறவிட்ட லக்னோ வீரர்கள்

புதனன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 66-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் ஒரு வித்தியாசமான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் டி காக் (140) - கே.எல்.ராகுல் (68) 20 ஓவர்கள் முழுமையாக நின்று 210 குவித்து ஐபிஎல் தொடரில் புதிய வரலாறு படைத்துள்ளனர். இன்னும் 4 ரன்கள் எடுத்திருந்தால் உள்ளூர் போட்டிகளில் புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கும். வல்லேட்டா கோப்பையில் கடந்த மே 13-ஆம் தேதி அன்று கிப்ரால்டர் அணி பல்கேரியா அணிக்கெதிராக  213 (புரூஸ் (99) பாலாஜி பாய் (86)) ரன்கள் குவித்து உள்ளூர் போட்டிகளில் உலக சாதனையை கையில் வைத்துள்ளது.

;