states

img

தகுதி நீக்கத்தை முறியடித்து மீண்டும் எம்.பி. ஆனார் பைசல்!

புதுதில்லி, மார்ச் 29 - தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த  முகமது பைசல், தகுதி நீக்க நட வடிக்கையை முறியடித்து லட்சத்தீவுக்கு மீண்டும் எம்.பி.யாகியுள்ளார். லட்சத்தீவு மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் முகமது பைசல். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவருக்கு, கொலைமுயற்சி வழக்கில், கவரொட்டி நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதனால் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவரின் லட்சத் தீவு தொகுதிக்கு இடைத்தேர்தலும் அறி விக்கப்பட்டது.

இதனிடையே, முகமது பைசலின் மேல்முறையீட்டை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், கவரொட்டி நீதி மன்றம் விதித்த 10 ஆண்டு சிறைத் தண்ட னைக்கு தடை விதித்ததுடன், எம்.பி.  பதவி தகுதி நீக்க உத்தரவையும் செல்லாது என்று அறிவித்தது. ஆனாலும் தகுதி நீக்க உத்தரவை திரும்பப் பெறும் அறிவிப்பை வெளி யிடாமல் மக்களவைச் செயலகம் பிடி வாதமாக இருந்து வந்தது. லட்சத்தீவு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தாலும், மக்களவைச் செய லகம் தன்னை மாற்றிக் கொள்வதாக இல்லை. 

இதையடுத்து, இந்த விவகாரத்தில் முகமது பைசல் உச்சநீதிமன்றத்தை நாடி னார். அங்கு பைசலின் வழக்கு, புதன்கிழ மையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக இருந்தது.  இந்நிலையில், வழக்கு விசார ணைக்கு வருவதற்கு சற்று முன்னதாக, லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக முன்னர் வெளியிட்ட உத்தரவை மக்களவைச் செயலகம் திரும்பப் பெற்றது. முகமது பைசல் எம்.பி.யாக தொடர்கிறார் என்றும் அறிவித்தது. முகமது பைசல் வழக்கானது, ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் மிகமுக்கியமான முன்னு தாரண வழக்காக அமைந்துள்ளது.