states

img

கேரள முதலமைச்சருக்கு பஹ்ரைனில் வரவேற்பு வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து பினராயி விஜயன் உரை

கேரள முதலமைச்சருக்கு பஹ்ரைனில் வரவேற்பு வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து பினராயி விஜயன் உரை

மணாமா உலக கேரள சபை, மலையாள மிஷன் மற்றும் பஹ்ரைன் கேரள சமாஜம் ஆகியவை இணைந்து புலம்பெயர்ந்த மலையாளிகள் சங்கமத்துக்கான ஏற்பாடு செய்தி ருந்தனது. பஹ்ரைன் கேரள சமா ஜம் வைர விழா மண்டபத்தில் நிகழ்ச்சியை முதலமைச்சர் பின ராயி விஜயன் தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து 2017 பிப்ரவரியில் முத லமைச்சராக பஹ்ரைனுக்கு தான்  மேற்கொண்ட பயணத்தையும், கேரளாவிற்கு புலம்பெயர் மலை யாளிகள் அளித்த பங்களிப்புகளை யும் நினைவு கூர்ந்த அவர் மேலும்  பேசுகையில்,”புலம் பெயர்ந்தவர் களுக்கு அளித்த அக்கறைக்கு பஹ்ரைன் அரசுக்கு நன்றியை தெரி வித்து கொள்கிறேன்.  புலம்  பெயர்ந்தவர்கள் மலையாளத்தை யும் கேரள கலாச்சாரத்தையும் போற்றுபவர்கள். பஹ்ரைனில் உள்ள புலம்பெயர்ந்தோர் பல்  வேறு பங்களிப்புகளில் முன்மாதிரி யாக உள்ளது.  மிகப்பெரிய வளர்ச்சியில் கேரளா கடந்த ஒன்பது ஆண்டுகளில் கேரளா அனைத்து துறைகளி லும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது . வளர்ச்சி சாத னைகளை பட்டியலிட்டு, சாதனை கள் பாதுகாக்கப்பட வேண்டும். 2016-2021 காலகட்டத்தில் தொட ங்கப்பட்ட வளர்ச்சி நடவடிக்கை கள் தொடர்ச்சியான நிர்வாகத்தின்  மூலம் முறையாக செயல்படுத்தப் பட்டன. தொடர்ச்சியான நிர்வா கத்தின் சிறப்பு அம்சம், ஏற்பட்ட முன்னேற்றம் பாதுகாக்கப்பட்டது. வளர்ச்சியை நோக்கி நகர முடிந் தது. இந்த சிறப்பு அம்சம் உள் ளார்ந்ததாகும்.  கேரளா குறித்து நிறைய தவ றான கருத்துக்களை பரப்பும் பல  தகவல்கள் உள்ளன. இது உண்மை  நிலைகளுடன் பொருந்தாதவை. 2016 உடன் ஒப்பிடும்போது கேர ளாவின் உள்நாட்டு உற்பத்தி இரட்  டிப்பாகியுள்ளது. நமது சொந்த வரு மானம் ரூ.87,000 கோடியாக அதி கரித்துள்ளது. இது கேரளாவின்  பொருளாதாரத்தில் முன்னேற்றத் தைக் காட்டுகிறது. கடந்த நிதியாண்  டில் கேரளா செலவிட வேண்டிய தொகையில் 70 சதவிகிதத்தை மாநி லம் வழங்கியது. மாநிலத்தின் உள்  நாட்டு வருமானம் அதிகரித்துள்ள தால் இது சாத்தியமானது. கேர ளம் தனது பொதுக் கடனை குறைத்து  வருவதாக சிஏஜி அறிக்கை கூறு கிறது. கேரளாவை மாற்றிய காரணிகள் 2026 ஆம் ஆண்டுக்குள், கே-டிஸ்க் உதவியுடன் இரண்டு லட்சம் பேருக்கு திறன் பயிற்சி  வழங்கப்படும். இந்த விஷயத்தில் மேலும் பல வெளிநாட்டு தொழில் முனைவோர் ஒத்துழைக்கத் தயா ராக இருக்க வேண்டும். சுவாமி  விவேகானந்தரால் பைத்தியக்கா ரத்தனம் என வர்ணிக்கப்பட்ட நாடு  இன்று இந்தியாவில் மிகவும்  வளர்ந்த நாடாக மாற்றப்பட்டுள் ளது. நில சீர்திருத்தங்களும், வெளி நாட்டு வாழ்க்கையும் கேரளாவில் அதிக அளவு செழிப்பை ஏற்படுத்தி யுள்ளன. இதில், பெரிய அளவி லான வளைகுடா குடியேற்றமும், அதனுடன் வந்த பொருளாதார முன்னேற்றமும் கேரளாவை மாற்று வதில் முக்கிய பங்கு வகித்த கார ணிகளாகும்” என அவர் கூறினார். புலம்பெயர்ந்தோர் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து முதலமைச்சரிடம் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்திய தூதர்  வினோத் ஜேக்கப், கலாச்சாரம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் சஜி செரியன், வெளிநாட்டு தொழி லதிபர் எம்.ஏ.யூசுப் அலி மற்றும் தலைமைச் செயலாளர் ஏ. ஜெய திலக் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு புலம்பெயர்ந்தோர் சங்  கத்தின் தலைவர் ராதாகிருஷ்ண பிள்ளை தலைமை தாங்கினார். பொது அழைப்பாளர் பி. ஸ்ரீஜித் வரவேற்றார், சமாஜம் பொதுச் செயலாளர் வர்கீஸ் காரைக்கல் நன்றி கூறினார். பஹ்ரைன் துணைப் பிரதமருடன் சந்திப்பு பஹ்ரைன் துணைப் பிரதமர்  ஷேக் காலித் பின் அப்துல்லா அல்  கலீஃபாவை முதல்வர் பினராயி விஜயன் சந்தித்தார். இந்த சந்திப்பு ரிஃபாவில் உள்ள துணைப் பிர தமரின் அரண்மனையில் நடை பெற்றது. முதலமைச்சர் துணைப்  பிரதமரை வரவேற்றார். கேரளா விற்கும் பஹ்ரைனுக்கும் இடையி லான உறவுகளை மேலும் வலுப்  படுத்துவதற்கான சாத்தியக்கூறு கள் குறித்து முதலமைச்சர் அவரு டன் விவாதித்தார். பஹ்ரைன் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் அப்துல்லா பின் அடில்  ஃபக்ரு, பஹ்ரைனுக்கான இந்திய  தூதர் வினோத் ஜேக்கப் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.