வெளிநாட்டில் படிப்பதற்காக 1,000 மாணவர்களுக்கு உதவித்தொகை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மாஸ்கட் ஹோட்டலில் கேரள அரசின் உன்னதி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்ற இந்நிகழ்விற்கு அமைச்சர் ஓ.ஆர்.கேலு தலைமை தாங்கினார். உன்னதி உதவித்தொகை வழங்கிய பின்பு முதலமைச்சர் பினராயி விஜயன் பேசுகையில்,”உன்னதி திட்டம் கேரளாவின் சமூக பரிணாமத்தை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி ஆகும். ஒரு காலத்தில் கல்வியும் அறிவும் மறுக்கப்பட்ட மக்களில் பெரும் பகுதி யினர் இப்போது வெளிநாட்டில் படிக்கப் போகிறார்கள். இந்த மாற்றம் திடீரென்று நடக்கவில்லை அல்லது அவர்களுக்கு வெள்ளித் தட்டில் வைத்து யாரும் வழங்க வில்லை. இது மறுமலர்ச்சியின் எண்ணற்ற போராட்டங்கள், முற்போக்கான அரசியல் இயக்கங்கள் மற்றும் முற்போக்கான அர சாங்கங்களின் தலையீடுகளின் விளைவாகும். இனி 1,000 மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கலாம். உன்னதி உதவித்தொகை இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு ரூ.25 லட்சம் வரை மதிப்புடையது. இது 50 பட்டியல் பழங்குடி மாணவர்களுக்கும், குறிப்பிட்ட வருமான வரம்பில் உள்ள 225 பட்டியல் சாதி மாணவர்களுக்கும், வருமான வரம்பைப் பொருட்படுத்தாமல் 35 பிற் படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 310 மாணவர்கள் இந்த உதவி யைப் பெறுகிறார்கள். அதே நேரத்தில், நாடுமுழு வதும் 125 மாணவர்கள் மட்டுமே ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் வெளிநாடு சென்று படிப்பதற்கான உதவித்தொகையைப் பெறு கிறார்கள்” என அவர் கூறினார். இந்த உன்னதி உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் வி.கே.பிரசாந்த் எம்.எல்.ஏ., எஸ்சி/எஸ்டி பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு செய லாளர் டாக்டர் ஏ.கவுசிக், பட்டியல் சாதி மேம் பாட்டு இயக்குநர் டி. தர்மலஸ்ரீ, பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டு இயக்குநர் மிதுன் பிரேம்ராஜ், பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு இயக்குநர் மிசல் சாகர் பாரத், ஒடெபெக் தலை வர் கே.பி. அனில்குமார், எம்.டி. சுபியான் அகமது ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.