states

img

பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா இடைநீக்கம்

பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா இடைநீக்கம்

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவராக இருந்த கே.சந்திரசேகரராவ் (கேடி ஆர்). இவர் 2022இல் முதலமைச்சராக இருந்த போது, தேசிய அரசியலில் கால் பதிப்பதற்காக தனது கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ்) என்று மாற்றினார். மேலும் கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் 3ஆவது அணி யை அமைக்கவும் அவர் முயற்சி மேற்கொண்டார். இந்த முயற்சி கைக் கொடுக்காததோடு தெலுங்கானா சட்ட மன்ற தேர்தலில் பிஆர்எஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. தெலுங்கானா வில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததும் சந்திரசேகரராவின் தீவிர அரசியல் செயல்பாடு படிப்படியாக குறைந்தது. பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சி க்குத் தாவினர். இதனிடையே சந்திரசேக ரராவ் உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின் அவர் கட்சி செயல்பாடுகளில் ஈடுபடவில்லை. இந்நிலையில்,  சந்திரசேகரராவின் மகன் கே.டி.ராமாராவுக்கும், சந்திர சேகரராவின் மகளும் எம்எல்சியுமான கவிதாவுக்கும் இடையே பிஆர்எஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்ற போட்டி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும் பிஆர்எஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க கட்சிக்குள்ளேயே சதி நடப்பதாகவும் கவிதா குற்றம் சாட்டினார். இத்தகைய சூழலில்தான் கவிதா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய் யப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டி பிஆர்எஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இந்த இடைநீக்கத்தை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.