states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

இமாச்சலப் பிரதேசத்தைப் புரட்டிபோட்ட பருவ மழை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கனமழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 386ஆக உயர்ந்துள்ளது என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் பள்ளி, கல்லூரி, உயர்நீதிமன்றத்திற்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டு வரும் நிலையில், சனிக்கிழமை அன்று தில்லியின் பிரபல தாஜ் ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

அமலாக்கத்துறைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் குட்டு

கடந்த மார்ச் மாதம் துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த நடிகை ஹர்ஷவர்தினி ரன்யாவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் ரூ.12.5 கோடி மதிப்பிலான தங்கக் கட்டி கள் (14.2 கிலோ) பறிமுதல் செய்யப் பட்டன. இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை, நடிகை ரன்யா தங்கக் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தை ஹவாலா வழியே முதலீடு செய்ததாக குற்றம்சாட்டி, பெங்களூரு மற்றும் தும்கூரில் உள்ள அவருக்குச் சொந்தமான ரூ.34 கோடிக்கும் அதிக மான சொத்துக்களை ஜூலை மாதம் முடக்கியது. இந்நிலையில், அமலாக்கத்துறை யின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகை ரன்யா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சச்சின் சங்கர் மகதும் இருதரப்பு வாதத்திற்கு பின்பு, “ஒரு குற்றச் சம்பவத்திற்கு முன்பு வாங் கப்பட்ட சொத்துக்களை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்க முடி யாது என உச்சநீதிமன்றம் பாவனா திப்பார் வழக்கில் 2023ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. மனுதாரர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் குற்றச்சாட்டுக்கு முன்பு வாங்கப்பட்ட சொத்துக்களை முடக்கி யது அதிகார வரம்பற்றது. வழக்கின் அடுத்த விசாரணை வரை இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என உத்தர விட்டார்.