பிரம்மாண்ட பேரணியுடன் ஜார்க்கண்ட் விவசாயிகள் மாநாடு தொடக்கம்
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் ஜார்க்கண்ட் மாநில மாநாடு பேரணி மற்றும் உற்சாகமான பொதுக்கூட்டத்துடன் பிப். 26ஆம் தேதி ராஞ்சி அருகே நக்ரியில் தொடங்கியது. தொடக்க விழாவிற்கு முன்பாக, ராஞ்சி மாவட்டத்தில் உள்ள தலதலி கிராமத்தில் தியாகி சுபாஷ் முண்டாவின் சிலைக்கு மரி யாதை செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பிஸ்கா நக்ரி கிராமத்தில் பிரம்மாண்டமான விவசாயிகள் பேரணி நடைபெற்றது. பொதுக்கூட்டம் தியாகி பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் தொடங்கி யது. இந்த நிகழ்வில் பெண்கள் பெரு மளவில் பங்கேற்றனர். ஜார்க்கண்ட் பாரம்பரிய சிறப்பு கலைநிகழ்வுகளும் நடைபெற்றன. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, நிதிச் செயலாளர் பி.கிருஷ்ணபிரசாத் உள்ளிட்ட தலை வர்கள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.
