states

img

ஜம்மு-காஷ்மீர் நிலச்சரிவு பலி

ஜம்மு-காஷ்மீர் நிலச்சரிவு பலி

எண்ணிக்கை  66 ஆக உயர்வு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை கனமழையோடு மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் கிஷ்த்வார் மாவட்டத்தின் ஏராளமான குடியி ருப்புகள் நீருக்குள் மூழ்கின. குறிப்பாக மலை மீது அமைந்துள்ள மசாலி மாதா கோவிலுக்கு செல்வதற்காக அங்கு திரண்டிருந்த ஏராளமான மக்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அங்கு தற்போது வெள்ளத்தில் பலியான பெண் ஒருவ ரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோரது எண்ணிக்கை மொத்தம் 66ஆக அதிகரித்துள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும், மாயமான 75 பேரை தேடும் பணிகள் 6-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் பேரிடரில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், ராணு வம் உள்பட ஏராளமான படைகள் ஈடு பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.