ஜேஎன்யூவில் ஜகதீப் தன்கருக்கு கடும் எதிர்ப்பு
தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு (ஜேஎன்யூ) “இந்திய அறிவு மரபு” குறித்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தி னராகக் கலந்து கொள்வதற்காக, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வருகை தந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத் தில், சில மாணவர்கள் வளாகத்திற்குள் துணை ஜனாதிபதியின் வாகனத்தை மறிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த காவல்துறையினர் துணை ஜனாதிபதி யின் காரை மறிக்க முயன்ற மாணவர் களை அப்புறப்படுத்தினர்.