“சிறையில் உள்ளது கன்னியாஸ்திரிகள் அல்ல, இந்திய அரசமைப்புச் சட்டம்”
சத்தீஸ்கரில் மலையாள கன்னி யாஸ்திரிகள் அநியாயமாக சிறை யில் அடைக்கப்பட்டதற்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் அழைப்பு விடுத்துள் ளார். கன்னியாஸ்தி ரிகள் அல்ல இந்திய அரசமைப்புச் சட்டம் சிறையில் உள்ளது என்றும், இந்தியா நரேந்திர மோடியால் அல்ல, மாறாக நரேந்திர பீதியால் ஆளப் படுகிறது என்றும் அவர் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. நாடு இதற்கு முன் கண்டிராத மக்கள் விரோதக் கொள்கைகளுடன் மோடி அரசு முன்னேறி வருகிறது. விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை பெரிய பிரச்ச னைகளாக மாறியுள்ளன. பசி மற்றும் வறுமை அதிகரித்து வருகிறது. இவை அனைத்திலிருந்தும் கவனத்தைத் திசை திருப்ப, மோடியும் பாஜகவும் மற்ற மதங்கள் மீது வெறுப்பைத் தூண்டுவதன் மூலம் மத வகுப்புவாதத்தை செயல் படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் பீதியைப் பரப்புகிறார்கள். உண்மையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அல்ல. ‘நரேந்திர பீதி’ தான் இன்று இந்தியா வை வழிநடத்துகிறது” என கடுமையாக சாடினார்.