இணைய மோசடி : ரூ.23 ஆயிரம் கோடியை இழந்த இந்தியர்கள்
என்ன செய்யப் போகிறது ஒன்றிய அரசு?
இணைய மோசடியால் இந்தி யர்கள் சுமார் 22,845.7 கோடி ரூபாய் இழந்துள்ளனர் என ஒன்றிய பாஜக அரசு நாடாளு மன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுத்துப்பூர்வ மாக அளித்த பதிலில், ஒன்றிய உள் துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், 2024 ஆம் ஆண்டில் தேசிய இணைய குற்றப் புகார் தளத்தில் (National Cyber Crime Reporting Portal) 22.6 லட்சத்திற்கும் அதிகமான இணைய குற்றச் சம்ப வங்கள் பதிவாகியுள்ளதாக தெரி வித்தார். 2022 இல் 10.3 லட்சம் இணைய குற்றங்களும், 2023 இல் 16 லட்சம் இணைய குற்றச் சம்பவங்களும் பதிவாகியிருந்த நிலையில் 2024 இல் சுமார் 42 சதவீதம் (2023 உடன் ஒப்பிடுகையில்) அதிகரித்துள்ளது. அதே போல 2024 இல் இந்தியர்கள் 22,845.7 கோடி ரூபாயை இணைய மோசடியின் காரணமாக இழந்துள்ள னர். இது 2023 ஆம் ஆண்டு பதிவான 7,465.1 கோடி ரூபாய் இழப்பை விட சுமார் 206 சதவீதம் அதிகமாகும். சைபர் குற்றங்களைக் கட்டுப் படுத்த காவல்துறை அறிக்கைகளின் அடிப்படையில் இதுவரை 9.4 லட்சத்திற்கும் அதிகமான சிம் கார்டு களையும், 2.6 லட்சத்திற்கும் அதிக மான IMEI (International Mobile Equipment Identity) எண்களையும் முடக்கியுள்ளதாக அவர் தெரி வித்துள்ளார். இணையத்தின் அசுர வளர்ச்சியில் உள்ள நன்மைகளுக்கு இணையாக மோசடி உள்ளிட்ட குற்றச் சம்பவங்க ளும் அதிகரித்து வருகின்றன. இந் நிலையில் அரசு எடுத்த நடவடிக்கை களால் குற்ற நடவடிக்கைகள் குறை வதற்கு மாறாக ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்திருப்பது முரணாக உள்ளது. இணைய குற்றங்களை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு முறையாக என்ன நட வடிக்கை எடுக்கப்போகிறது என கேள்விகள் எழுந்துள்ளன.