states

img

‘ஆல்ட் நியூஸ்’ இணை நிறுவனர் முகம்மது ஜூபைர் கைது

இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

புதுதில்லி, ஜூன் 28- போலியான செய்திகளை ஆதாரங்களு டன் அம்பலப்படுத்தி வந்த ‘ஆல்ட் நியூஸ்’  இணையதள செய்தி நிறுவனத்தின் இணை  நிறுவனர் முகமது ஜூபைரை, ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தில்லி காவல்துறை கைது செய்திருப்பதற்கு, சர்வ தேச அளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது. “இந்தியாவில் பத்திரிகையாளர் சுதந்தி ரம் பறிக்கப்படுவதையே முகம்மது ஜூபை ரின் கைது காட்டுகிறது” என்று ‘ஊடகவிய லாளர் பாதுகாப்புக் குழு’ (Committee to  Protect Journalists - CPJ) என்ற சர்வதேச  ஊடக நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. “குறிப்பிட்ட விவகாரங்கள் தொடர்  பாக செய்தி வெளியிடும் பத்திரிகையாளர் களுக்கு பாதுகாப்பற்ற நிலையை அரசு உருவாக்கி இருக்கிறது. ஜூபைரை எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடு தலை செய்ய வேண்டும்” என ஊடகவியலா ளர் பாதுகாப்புக்குழுவின் (Committee to  Protect Journalists -CPJ) ஆசியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவன் பட்லர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“இந்திய பத்திரிகையாளரும், பிரதமர்  நரேந்திர மோடியின் முக்கிய விமர்சகரு மான முகம்மது ஜூபைர், டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவுகளுக்காக திங்கட் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்” என்று  அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்தி ரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜூபைர் கைதுக்கு, காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். “பாஜகவின் வெறுப்பு, மதவெறி மற்றும் பொய்களை அம்பலப்படுத்தும் ஒவ்வொரு நபரும் அவர்களுக்கு அச்சு றுத்தலாக இருக்கிறார்கள். உண்மையின் ஒரு குரலைக் கைது செய்வது இன்னும்  ஆயிரம் பேரை எழுப்பும். கொடுங் கோன்மை மீது சத்தியம் எப்போதும் வெற்றி  பெறும்” என்று ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். “தில்லி போலீஸ் சாஹிப்களை திருப்  திப்படுத்த அவர்கள் பின்னால் குனிந்து  சட்டத்தை வளைக்கிறது. பத்திரிகையாளர் முகமது ஜூபைர் பொய் வழக்கில் கைது  செய்யப்பட்டு உள்ளார். அதேநேரம், ப்ரிஞ்ச் சர்மா (நூபுர் சர்மா) மக்கள் வரிப் பணத்தில் வழங்கப்பட்ட பாதுகாப்புடன் மகிழ்ச்சியாக வெளியில் உள்ளார்” என்று  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா சாடியுள்ளார். இதேபோல காங்கிரஸ் எம்.பி. ஜெய் ராம் ரமேஷ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலை வர் மனோஜ் ஜா, தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் ஒய். சதீஷ் ரெட்டி, திரிணா முல் காங்கிரஸ் தலைவா் டெரிக் ஓ பிரை யன் எம்.பி., மஜ்லிஸ் கட்சித் தலைவா் ஒவைசி ஆகியோரும் முகமது ஜூபைரின் கைதுக்கு தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

தீங்கிழைக்கும் வகையில் குறிவைக்கப்படுகிறார் ஜூபைரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதம்

இதனிடையே, முகம்மது ஜூபை ரின் ஒரு நாள் போலீஸ் காவல்  முடிவடைந்ததை அடுத்து, செவ்வா யன்று தில்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஸ்னிக்தா சவாரியா முன்பு ஜூபைர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, போலீஸ் காவலை மேலும் 5 நாட்கள் நீட்டிக்க தில்லி காவல்துறை  கோரிக்கை விடுத்தது. இதற்கு ஜூபைர்  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிருந்தா  குரோவர் எதிர்ப்பு தெரிவித்தார். “ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் ‘தீங்கிழைக்கும் வகை யில் குறிவைக்கப்படுகிறார்’ என்றும்,  ‘முழு வழக்கும் அபத்தத்தின் எல்லை யில் உள்ளது’” என்றும் குரோவர் நீதி மன்றத்தில் வாதிட்டார். மேலும், “ஜூபைர் ஒரு உண்மையை சரிபார்ப்ப வர் மற்றும் பத்திரிகையாளர்” என்று  கூறிய குரோவர், “போலிச் செய்திகள்  மற்றும் வீடியோக்களை வெளியிடுப வர்களை ஜூபைர் அம்பலப்படுத்து கிறார் அதனால் அவர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை” என்றும் குறிப்பிட்டார்.

மோடி அரசின் பொய்களை அம்பலப்படுத்தி வந்தவர் ‘ஆல்ட் நியூஸ்’ முகம்மது ஜூபைர்!

வலதுசாரிகள் பரப்பிவிடும் போலிச் செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து மக்களுக்கு உண்மையைச் எடுத்துச் சொல்லும் ஊடகமாக ‘ஆல்ட் நியூஸ்’  இணையதளம் இருந்து வருகிறது. இதனால் ‘ஆல்ட் நியூஸ்’ இணைய தளம் மீதும், அதன் இணை நிறு வனர் முகம்மது ஜூபைர் மீதும் நீண்டகாலமாகவே பாஜக மற்றும் வலதுசாரிகள் ஆத்திரம் கொண்  டிருந்தனர். இதனிடையே, 2020-ஆம் ஆண்டு இந்துச் சாமியார்கள் மாநாட்டில், ‘முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும்’ என பேசியதை முகம்மது ஜூபைர் கடுமையாக விமர் சித்து பதிவுகளை வெளியிட்டார்.  இதையே காரணமாக பிடித்துக் கொண்டு உ.பி. பாஜக அரசின் காவல் துறை ஜூபைர் மீது வழக்கு பதிவு செய்தது. அவரை கைது செய்யவும் முயன்றது. ஆனால், ஜூபைர் முன்  ஜாமீன் பெற்றதால் கைது நடவ டிக்கை நிறைவேறவில்லை.

இதனிடையே, முகம்மது நபிகள் குறித்து பாஜக செய்தித் தொடர்பா ளர்கள் நூபுர் சர்மா, நவீன் குமார்  ஜிண்டால் ஆகியோர் வெளியிட்ட அவதூறு கருத்துக்கள் இந்தியாவில் மட்டுமன்றி சர்வதேச அளவில் பிரச்  சனையாக மாறியது. சவூதி அரே பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம்,  குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடுகள், இந்தியத் தூதர்களை அழைத்து, நூபுர் சர்மா வின் பேச்சுக்கு தங்களின் கண்டனங்  களை பதிவு செய்தன. அரபு நாடு களில், ‘இந்தியாவைப் புறக்கணிப் போம்’ (#Boycott India) என்ற ஹேஷ்  டேக்-க்கும் டிரெண்ட் ஆனது.  இதனால், நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் மீது பாஜக கட்சி  ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்  டிய கட்டாயம் உருவானது. சர்வதேச அளவில் ஆளும் பாஜக அரசுக்கு பெரும் அவமானமாக அது அமைந்தது. நூபுர் சர்மா பேச்சு மிகப்பெரிய விவகாரமாக மாறியதற்கு, பத்திரி கையாளர் முகம்மது ஜூபைர்தான் காரணம் என்பது ஆளும் பாஜக தரப்பினரின் எண்ணமாகும். ஏனெ னில் நூபுர் சர்மாவின் பேச்சையும், அதற்கான கண்டனத்தையும், முதன்  முதலாக ஜூபைர்தான் தனது ‘ஆல்ட் நியூஸ்’ இணையதளத்தில் வெளி யிட்டார். அதன் பின்னர்தான் அது உள்  நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவா தமாக மாறியது. எனவே, ‘ஆல்ட் நியூஸ்’ முகம்மது ஜூபைர் மோடி அர சால் குறிவைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்தான் 2020-ஆம் ஆண்டு வழக்கு தொடர்பாக விசா ரிக்க வேண்டும் என்று ஜூபைரை தில்லி காவல்துறை திங்களன்று நேரில்  அழைத்திருந்தது. அவரும் ஆஜராகி யிருந்தார். அவரிடம் நாள் முழுவதும் விசாரணை நடத்திய தில்லி போலீ சார் மாலை 6.45 மணிக்கு மேல் திடீ ரென கைது நடவடிக்கையில் இறங்கி னர்.

இந்த வழக்கில் ஜூபைர் முன் ஜாமீன் பெற்றுள்ள நிலையில், அவரை எவ்வாறு கைது செய்ய முடியும்? என்று கேள்விகள் எழுந்தது.  அப்போது, 2020-ஆம் ஆண்டு வழக்கில் அல்லாமல், 2018-ஆம் ஆண்டு மத உணர்வுகளைப் புண்  புடுத்தியதாக டுவிட்டர் நிறுவனத்திட மிருந்து வந்த தகவலை புகாராக எடுத்துக் கொண்டு தற்போது “இந்  திய தண்டனைச் சட்டம் 153ஏ (மதம், இனம், பிறப்பிடம், மொழியின் அடிப்ப டையில் இருபிரிவினா் இடையே பகையை உருவாக்குதல்), 295ஏ (மத உணர்வை வேண்டுமென்றே காயப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின்  கீழ் புதிதாக வழக்கு தொடரப்பட்ட உள்ளதாகவும், இந்த புதிய வழக்கி லேயே முகமது ஜூபைர் கைது செய்  யப்பட்டு உள்ளதாகவும் தில்லி  காவல்துறை விளக்கம் அளித்துள் ளது. “ஒரு குறிப்பிட்ட மதத்தின் கட வுளை வேண்டுமென்றே அவமதிக் கும் நோக்கத்துடன் முகம்மது ஜூபைர் ஒரு சந்தேகத்திற்குரிய படத்தை டுவீட் செய்ததாக டுவிட்டர் நிறுவனத்திடம் இருந்து புகாரைப் பெற்ற பின்னரே அவர்மீது வழக்குப் பதிவு செய் துள்ளோம். உளவுத்துறை மற்றும்  ஐஎப்எஸ்ஓ சிறப்பு பிரிவு சார்பில்  கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது’’ என்று தில்லி உளவுத்துறை டிசிபி கேபிஎஸ் மல்ஹோத்ரா கூறி யுள்ளார். “தொடர்ந்து ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை அவர் ஜூபைர் பதிவிட்ட டுவீட்டுகளை பாது காக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவ னத்துக்கு கடிதம் எழுதப்பட உள்ள தாகவும் டிசிபி மல்ஹோத்ரா தெரி வித்துள்ளார்.

;